தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1pm - top 10 news tamil

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1pm
1pm

By

Published : Jun 2, 2021, 1:23 PM IST

  1. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு: இரண்டு நாள்களில் முடிவு

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து கருத்துக்களைக் கேட்க தமிழ்நாடு அரசு முடிவு செய்யும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

2.'நெகட்டிவ் என வந்தாலும் கரோனா இறப்பு எண்ணிக்கையில் சேர்க்க வேண்டும்'

கரோனா தொற்று பாதிக்கப்பட்டு லேசான அறிகுறியுடன் கரோனா பாதுகாப்பு மையத்தில் இருக்கும் நபர்களை 10 நாள்களில் டிஸ்சார்ஜ் செய்யலாம். அதன் பின்னர் ஏழு நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என என மருத்துவர் சாந்தி தெரிவித்துள்ளார்.

3.பைக்கில் பழச்சாறுடன் சென்ற இளைஞர்கள்: சாராய ஊறலுக்காக எடுத்துச் செல்லப்பட்டதா?

திருச்சி: மணப்பாறை அருகே பழச்சாறுடன் சோதனைச்சாவடியை கடக்க முயன்ற இளைஞர்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், சாராய ஊறலுக்காக எடுத்துச் செல்லப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

4.முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவு; ராமநாதபுரம் விரைந்த தனிப்படை

துணை நடிகை அளித்த புகாரினால் தலைமறைவாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் குறித்த ஆதாரங்களை திரட்ட தனிப்படை காவல் துறையினர் ராமநாதபுரம் சென்றுள்ளனர்.

5.கரோனா தடுப்புப் பணிகள்: மருத்துவ வல்லுநர் குழு ஆலோசனை

கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடந்திவருகின்றனர்.

6.குறைந்து வரும் கரோனா பாதிப்பு: இன்றைய நிலவரம்?

இந்தியாவில் கடந்த சில நாள்களாகவே கரோனா பாதிப்பு இரண்டு லட்சத்திற்கும்கீழ் பதிவாகி வருகிறது.

7.பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு மறுவாழ்வளிக்குமாறு முதலமைச்சருக்கு சீமான் கோரிக்கை

ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் கடன் தவணைகளை வசூலிக்க ஓராண்டு காலம் அவகாசம் அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

8.உ.பி.யில் சிலிண்டர் வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசம்: வஜீர் கஞ்ச் பகுதியில் உள்ள திக்ரி கிராமத்தில் நேற்று (ஜூன் 1) இரவு ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் 7 பேர் உயிரிழந்தனர்.

9.இளையராஜா மேஸ்ட்ரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இசைஞானி இன்று (ஜூன் 2) தனது 65ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இசையால் தமிழ் ரசிக மனங்களைக் கட்டிப்போட்ட என்றும் இசையின் ராஜா இளையராஜா குறித்த சிறப்புக் கட்டுரை.

10.நடிகர் ஜி. ராமச்சந்திரன் காலமானார்

தயாரிப்பாளரும், நடிகருமான ஜி. ராமச்சந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜூன் 2) காலமானார்.

ABOUT THE AUTHOR

...view details