தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 1 PM - top 10 news in tamil

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 PM
1 PM

By

Published : Jun 1, 2021, 1:35 PM IST

1.தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஓரிரு நாளில் முடிவு - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக ஓரிரு நாளில் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2.பிளஸ் டூ தேர்வு எப்போது? - முதலமைச்சர் ஆலோசனை

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்திவருகிறார்.

3.'என்னை நானே ஒப்படைத்துக்கொண்டுள்ளேன்' - முதலமைச்சர் பேச்சு

கரோனா தொற்று மக்களிடையே எப்படி பரவுகிறது, கரோனா பரவலை தடுப்பது எப்படி ஆகியவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழிப்புணர்வு காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
4.ஆ. ராசாவின் மனைவி இறப்புக்கு கே.எஸ். அழகிரி ஆறுதல்

பெரம்பலூர்: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் மனைவி இறப்பிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

5.கூடுதல் மகசூல் கிடைக்க கடுமையாக உழைத்த விவசாயிகள்: மாவட்ட ஆட்சியர் பாராட்டு!

ராமநாதபுரம்: இரண்டாயிரத்து 766 ஏக்கர் பரப்பளவில் கூடுதல் மகசூல் கிடைக்க கடுமையாக உழைத்த இரண்டாயிரத்து 214 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.

6.சேலம் - சென்னை விமானச் சேவை மீண்டும் தொடக்கம்

சென்னை: சேலம்- சென்னை இடையிலான விமானச் சேவை இன்று(ஜூன்.1) முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

7.'ரொம்ப நேரம் கிளாஸ் எடுக்குறாங்க' - பிரதமரிடம் போட்டுக் கொடுத்த சிறுமி

ஆன்லைன் வகுப்புகளால் மன உளைச்சலுக்கு ஆளான காஷ்மீரைச் சேர்ந்த 6 வயது சிறுமி மழலை மொழியில் பிரதமர் மோடியிடம் புகார் கூறும் காட்சி இணையத்தில் வைரலானது.

8. 'அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது' : சீமான் கொந்தளிப்பு

சென்னை: அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்குவதால்தான், தொழிலாளர்கள் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் எனவும் இதனை தமிழ்நாடு அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்க கூடாது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

9.எதிர்பார்ப்பை எகிற வைக்கும் 'ஜகமே தந்திரம்' ட்ரெய்லர்

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ட்ரெயலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

10.கால்பந்து உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவிலிருந்து மாற்றம்!

கடும் எதிர்ப்பு காரணமாக சீனாவில் நடக்கவிருந்த பிபா கால்பந்து உலகக் கோப்பையின் தகுதிச்சுற்று போட்டிகள், வேறு பொதுவான நாட்டுக்கு மாற்றப்படும் என ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details