தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1PM - ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்பு

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

Top 10 News @ 1 PM
Top 10 News @ 1 PM

By

Published : May 10, 2021, 1:17 PM IST

'ஏழு தமிழர்களை விடுதலை செய்க' - முதலமைச்சருக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா வந்தா என்ன? பதற வேண்டாம் - கூப்பிடுங்க '104'

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறி உள்ளவர்கள், பிராணவாயு தேவைப்படுபவர்கள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி இருப்பு தெரிந்துகொள்ள நினைப்பவர்கள், உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பை அறிந்துகொள்ள நினைப்பவர்களா நீங்கள்? ஒரு அழைப்பில் இவை அனைத்தும் சாத்தியப்படும்.

அஸ்ஸாம் முதலமைச்சராக ஹிமந்த விஸ்வ சர்மா பதவியேற்பு

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்த விஸ்வ சர்மா சற்று நேரத்தில் பதவியேற்கிறார்.

கர்நாடகாவில் புதிய கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்!

பெங்களூரு: கடுமையான கட்டுபாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று (மே.10) அதிகாலை முதல் கர்நாடகாவில் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 3,754 பேர் உயிரிழப்பு!

நேற்று(மே.9) ஒரே நாளில் மூன்று லட்சத்து 66 ஆயிரத்து 161 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி!

இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு இன்று (மே.10) மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

அண்ணனாக நடித்த பாய்ஃப்ரெண்டின் தந்தை - திஷாவுக்கு சத்தியசோதனை

திஷா உங்களை படப்பிடிப்பு தளத்தில் எப்படி அழைப்பார் என ஜாக்கியிடம் கேட்டதற்கு, திஷா என்னை ஜாக்கி சார் அல்லது ஜாக்கி அங்கிள் என்றே படப்பிடிப்பு தளங்களில் அழைப்பார் என தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று நெருக்கடியால் பழ வியாபாரியான கவுரவ விரிவுரையாளர்!

பெருந்தொற்று பரவலால் இளநிலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றவர்களும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத் துறை அமைச்சருக்கு கரோனா தொற்று!

தமிழ்நாடு சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

டெல்லியில் குறையத் தொடங்கிய கரோனா: பலன் தந்த முழு ஊரடங்கு!

டெல்லி: முழு ஊரடங்கு காரணமாக, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 35 விழுக்காடிலிருந்து 23 ஆக குறைந்துள்ளதாக டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details