தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM - 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம் இதோ...

1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM
1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

By

Published : May 5, 2021, 1:12 PM IST

1. 'மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி வந்தால் மகிழ்ச்சி கொள்வேன்' - வி.கல்யாணம்

'தற்போதுள்ள ஆட்சியாளர்களைவிட ஆங்கிலேயர்கள் எவ்வளவோ மேல். இந்தியாவில் மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி மலர்ந்தால் மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்' என்று தேசப்பிதா காந்தியின் தனிப்பட்ட உதவியாளராக இருந்த கல்யாணம் ஈடிவி பாரத்திடம் தெரிவித்துள்ளார்.

2. செங்கல்பட்டு 11 பேர் மரணம்: நெஞ்சை உருக்கும் ஓலங்கள்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 11 பேர் இன்று (மே 5) அதிகாலை மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் துக்கத்தில் கதறும் காட்சிகள் கரோனாவின் கோர தாண்டவத்தை நம்முன் காட்டுகிறது.

3. மராத்தா சமூகத்திற்கான இட ஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் ரத்து!

மராத்தா சமூகத்திற்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு அரசியல் அமைப்புக்கு எதிரானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

4. யோகா டீச்சரை கொலை செய்த வழக்கறிஞர் தற்கொலை!

மதுரை: யோகா ஆசிரியையைக் கொலை செய்த வழக்கறிஞர் குற்ற உணர்ச்சியால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5. ஆற்றின் குறுக்கே கம்பிகளில் கொண்டு செல்லப்பட்ட ஜேசிபி இயந்திரம்!

சாமோலி பகுதியில் உள்ள அலகானந்தா ஆற்றை கடந்து பொக்கலைன் இயந்திரம் ஒன்றை கொண்டு செல்ல கம்பி பாலம் அமைக்கப்பட்டது. அதன்மூலம் பல அடி உயரத்தில் ஆற்றைக் கடந்து பொக்கலைன் இயந்திரம் கொண்டு செல்லப்பட்ட காணொலி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

6. கரோனா பரிசோதனை மேம்பட நடவடிக்கை: ஐசிஎம்ஆர் அறிவுறுத்தல்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கரோனா இரண்டாவது அலையின் போது சோதனைக்கான ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.

7. விதி மீறி செயல்பட்ட கடைகள்: சீல் வைத்த அலுவலர்கள்

திருப்பத்தூர்: ஆம்பூரில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 கடைகளுக்கு, கோட்டாட்சியர் தலைமையில் அலுவலர்கள் சீல் வைத்தனர்.

8. 1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால்தான் 18 வயதோருக்கு தடுப்பூசி: செல்வ விநாயகம்

சென்னை: 1.50 கோடி தடுப்பூசிகள் வந்தால்தான் 18 வயதோருக்கு தடுப்பூசி என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

9. ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு - எதிர் நுண்ணுயிர் மாசுப்படுத்திகளை கண்டறியும் சென்சார்

சென்னை :எதிர் நுண்ணுயிர் மாசுப்படுத்திகளை கண்டறியும் காகிதம் அடிப்படையிலான சென்சாரை சென்னை ஐஐடி மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

10. தமிழ்நாட்டில் படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதி!

தமிழ்நாட்டில் படுக்கை வசதிகள் இல்லாததால் கரோனா நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details