தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 1PM - சிங்காரவேலன் கதை திருட்டு

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ..

Top 10 news @ 1PM
Top 10 news @ 1PM

By

Published : Mar 29, 2021, 1:08 PM IST

இந்தியா, பாகிஸ்தான் அமைதியை அடைய ஒரே வழி காஷ்மீர்- மெகபூபா முப்தி

இந்தியா, பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமைதியை விரும்பினால், அதை ஜம்மு காஷ்மீர் மக்கள் மூலமாகதான் அடைய முடியும் என்று அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் இலவச மாஸ்க் தரமுடியாத அரசு, வாஷிங்மெஷின் இலவசமாகத் தருமா?

விருதுநகர்: அரசு மருத்துவமனைகளில் இலவசமாக முகக் கவசம் தர இயலாமல் இரண்டு ரூபாய்க்கு அவற்றை விற்பனை செய்யும் அரசு, எப்படி மக்களுக்கு இலவச வாஷிங் மெஷினைத் தரும் என சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மைச் செயலாளர் ராதிகா சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் ஆசையை வெளிப்படுத்திய வைகோ மகன்

விருதுநகர்: மக்கள் என்னை எம்.எல்.ஏவாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ பார்க்க எண்ணினால் அப்போது நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவேன் என மதிமுக பொதுச்செயலாளர் மகன் துரை வையாபுரி கூறியுள்ளார்.

தங்கம் தென்னரசு தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக் கோரிக்கை: தேர்தல் ஆணையத்தை அணுகும்படி நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருச்சுழி தொகுதியின் தேர்தலை ரத்து செய்வது, திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசுவை தகுதி நீக்கம் செய்வது ஆகிய கோரிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்: நரேந்திரபூரில் 56 குண்டுகள் பறிமுதல்!

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் நரேந்திரபூரில் மார்ச் 27-28 தினங்களுக்கு இடைப்பட்ட இரவில் 56 குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இயக்குநர் சரவண சக்தி மீது சிங்காரவேலன் கதை திருட்டு குற்றசாட்டு!

தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆவடி தொகுதி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி

சென்னை: ஆவடி தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உசேன் போல்ட் ஸ்ரீநிவாஸ் கவுடா புதிய சாதனை!

கம்பலா ஓட்டப்பந்தய வீரர், கர்நாடக உசேன் போல்ட் ஸ்ரீநிவாஸ் கவுடா 100 மீட்டர் பந்தய தூரத்தை 8.78 விநாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு இவர் கம்பலா போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 9.55 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார்.

தொடரும் மியான்மர் ராணுவத்தின் வெறியாட்டம்: 114 பேர் சுட்டுகொலை, வலுக்கும் கண்டனக் குரல்கள்!

மியான்மர்: ராணுவ அடக்குமுறையால் முன்னதாக உயிரிழந்த மாணவர் ஒருவரின் இறுதிச் சடங்கில் நேற்று முன் தினம் (மார்ச்.27) கலந்துகொண்ட நபர்கள்மீது அந்நாட்டு ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 114 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தினம் ஒரு கோயில்: நேற்று சசிகலா தரிசனம் செய்த கோயில் எது?

ராமநாதபுரம் : அண்மைக் காலமாக கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டு வரும் சசிகலா, ராமேஸ்வரம், ராமநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று (மார்ச் 28) நடைபெற்ற ஸ்படிக லிங்க பூஜையில் பங்கேற்று கடவுள் தரிசனம் செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details