தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm - latest news

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

top 10 news at 1 pm
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm

By

Published : Mar 17, 2021, 1:58 PM IST

இந்தியாவில் தொடர்ந்து உயரும் கோவிட்-19; ஒரு நாளில் 28,903 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 28 ஆயிரத்து 903 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 188 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடி, போர்த்துகீசிய பிரதமருடன் பேச்சு!

பிரதமர் நரேந்திர மோடி போர்த்துகீசிய பிரதமருடன் டெலிபோனில் உரையாடினார்.

உலகில் மிக மோசமாக மாசடைந்த நகரம் "டெல்லி": ஆய்வில் தகவல்

உலகில் மிக மோசமான அளவில் காற்று மாசு கொண்ட நகரமாக டெல்லி உள்ளதாக ஸ்விஸ் நிறுவன ஆய்வு தகவல் தெரிவிக்கிறது.

கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயி தனது கணவரின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

பண மூட்டையுடன் அலையும் துரோக கூட்டணி -அதிமுக-வை சாடிய டிடிவி!

மக்களுக்கு பணம் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என துரோக கூட்டணி அலைகிறது என அதிமுகவை டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

'கச்சத்தீவு பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்படும்' - மத்திய இணையமைச்சர் வி.கே. சிங்

கச்சத்தீவு பிரச்னைக்கு சுமூக தீர்வு எட்டப்படும் என மத்திய கப்பல் மற்றும் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

மலைச்சரிவில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு!

சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரி மலைச்சரிவில், தவறி விழுந்த முதியவர் 12 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டார்.

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு

சாலை விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.80 லட்சம் பறிமுதல்!

அந்தியூர் பகுதியில் நடந்த வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 1 லட்சத்து 80 ஆயிரத்து 500 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இளையராஜாவை சந்தித்த நடிகர் விவேக்!

இளையராஜாவை அவரது புதிய ஸ்டூடியோவில் சந்தித்து நடிகர் விவேக் பேசியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details