தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிற்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - Headlines

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 News @ 1 PM
Top 10 News @ 1 PM

By

Published : Jan 28, 2021, 1:02 PM IST

ஜெயலலிதா பிறந்த நாள் அரசு விழா

ஜெயலலிதா பிறந்தநாளான பிப்.24ஆம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வேதா நிலையம் இல்லத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர்

நினைவு இல்லமாக மாற்றம் செய்யப்பட்ட சென்னை போயஸ் கார்டனிலுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா நிலையம்' இல்லத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதலமைச்சர் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையத்துடன் ஏன் மோத வேண்டும்?

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம், மாநில தேர்தல் ஆணையம் எங்கு வரம்பு மீறி செயல்பட்டது, அரசாங்கம் அவருக்கு எதிராக ஏன் உள்ளது? அரசாங்கத்தின் இது போன்ற வாதங்களுக்கு வேறு காரணங்கள் உள்ளன என்ற தோற்றத்தை அளிக்கிறது என்று கூறியது. தேர்தல்களைப் பொறுத்தவரை மாநில தேர்தல் ஆணைய முடிவு இறுதியானது என்று கூறி நீதிமன்றம் அரசியலமைப்பை உறுதிப்படுத்தியது.

'150 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியது இந்தியா' - வெளியுறவுத்துறை அமைச்சர்

கரோனா பெருந்தொற்று காலத்தில் 150 நாடுகளுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய மறுத்த காதலனை கொலை செய்த காதலி உள்பட 4 பேர் கைது

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய காதலனை கொலை செய்த காதலி உள்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் போக்சோவில் கைது

பொள்ளாச்சியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 பேர் போக்சோவில் கைது

சிம்புவுக்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்!

சிம்பு, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் வில்லனாக இயக்குநர் கௌதம் நடிக்கவுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ரபாடா!

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 200ஆவது விக்கெட்டை வீழ்த்தினார்.

'காலநிலை நெருக்கடிக்கு ஒருங்கிணைந்த பதில் தேவை' - ஜோ பைடன்

காலநிலை நெருக்கடியை சரிசெய்வதற்கு ஒருங்கிணைந்த பதில் தேவைப்படுகிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details