தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - விவசாய கடன்

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 1PM
Top 10 news @ 1PM

By

Published : Jan 15, 2021, 1:09 PM IST

தமிழில் அஞ்சல் துறை தேர்வு எழுதலாம் - சு. வெங்கடேசன் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு!

சென்னை: அஞ்சல் துறையில் உள்ள கணக்கர் பணிக்கான தேர்வைத் தமிழர்கள், தாய்மொழித் தமிழில் எழுதலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜோ பைடன் குழுவில் மீண்டும் ஒரு காஷ்மீரி பெண்!

ஸ்ரீநகர்: அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் குழுவில் காஷ்மீரை பூர்விகமாக கொண்ட பெண் ஒருவர் இடம்பிடித்துள்ளார்

விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய மார்க்சிஸ்ட் கோரிக்கை

சென்னை: கனமழையால் நாசமான பயிர்களுக்கு, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கிடவும், விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகை: ரூ 416 கோடிக்கு மது விற்பனை

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.416 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

தாகம் தீர்த்த தந்தை பென்னிகுயிக்கிற்கு 180ஆவது பிறந்தநாள் - மரியாதை செலுத்திய ஓபிஎஸ்

தேனி: முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் உடைய 180ஆவது பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கும் திருவுருவச் சிலைக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

5 ரூபாய் சாப்பாடு: பசியாற்றுவதை விட வேறு கொடை உண்டா?

திருச்சி: ஒரு வேளை உணவுக்காக போராடும் ஏழை எளிய மக்களுக்காக கணவரின் வருமானத்தை வைத்து பெண் ஒருவர் குறைந்த விலையாக 5 ரூபாய்க்கு உணவு வழங்குவதை தொழிலாக செய்துவருகிறார்.

11 திருமணங்கள், கூட்டுப் பாலியல், ஆபாசப் படம் எடுத்தல்... எப்படி சிக்கினார் 22 வயது இளைஞர்

சென்னையில் 22 வயது இளைஞர் ஒருவர் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்ததுடன் மட்டுமல்லாது, அவர்களை மிரட்டி ஆபாசப் படங்களையும் எடுத்துள்ளார்.

நெல்லையில் கடந்த 15 நாள்களில் 330 மில்லி மீட்டர் மழை பதிவு!

திருநெல்வேலி: மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாள்களில் 330 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஆடவர் கால்பந்து அணிகளுக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள்!

மார்ச் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ஆடவர் கால்பந்து அணிகளுக்கான ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்படும் என வட, மத்திய அமெரிக்கா & கரீபியன் கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

CES 2021: காட்சிப்படுத்தப்பட்ட புதிய ஆசஸ் மடிக்கணினிகள்!

நுகர்வோர் தகவல் சாதன நிகழ்வு (CES 2021)இல் ஆசஸ் நிறுவனம் தனது புதிய மடிக்கணினிகளை காட்சிப்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details