தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - ஈடிவி பாரத்தின் செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்..

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்
மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jan 7, 2021, 1:06 PM IST

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும், அடுத்த நான்கு நாட்களுக்கு மாநிலத்தில் மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'தேஜஸ் ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது ' - எம்.பி. சு. வெங்கடேசன்!

மதுரை: தேஜஸ் சிறப்பு ரயில் மீண்டும் இயக்கப்படும் என்ற மத்திய ரயில்வே அமைச்சகத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றும் மக்களின் குரலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் இன்றும் கருத்து கேட்பு!

சென்னை: பொங்கல் விடுமுறைக்கு பின்னர் 10, 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் இன்றும் (ஜன. 7) கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

மாமூல் வசூலிக்கும் காவலர்: ஆணையரிடம் வியாபாரிகள் மனு!

சென்னை: சிறு வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருவெல்லிக்கேணி காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு காவலர் மீது ஆணையரிடம் சிறு வியாபாரிகள் புகார் மனு அளித்தனர்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையைச் சுற்றி ராணுவப் படையினர் பாதுகாப்பு

புதுச்சேரி: ஆளுநர் மாளிகை அருகே காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் அறிவித்ததையடுத்து துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பறவைக் காய்ச்சல் : பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கேரள அரசு முடிவு

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக நடைபெற்று வரும் பறவைகள் அழிப்பு பணியால் பாதிக்கப்படும் பண்ணை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கிசான் திட்டத்தை செயல்படுத்த அலுவலர் நியமிக்க வலியுறுத்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அலுவலரை நியமிக்குமாறு மத்திய அரசு மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளது.

ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் உயர்ந்து 48 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.

ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தேதி அறிவிப்பு!

இந்தாண்டு ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 16ஆம் தேதி முதல் சீனாவில் நடைபெறுமென ஆசிய கால்பந்து சம்மேளனம் (ஏஎஃப்சி) அறிவித்துள்ளது.

வெயிட்டிங்கையே வெறி ஏத்தும் கேஜிஎஃப் டீசர் நாளை வெளியீடு!

கன்னட நடிகர் யாஷ் பிறந்தநாளை ஒட்டி நாளை காலை 10.18 மணியளவில் கேஜிஎஃப் சேப்டர் 2-வின் டீஸர் ஹோம்பாலே என்னும் யூடியூப் சேனலில் வெளியிடப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details