தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - 1 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்தி
1 மணி செய்தி

By

Published : Oct 16, 2020, 12:55 PM IST

1.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை - அமைச்சர் கே.பி. அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

2.”மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்” - ட்ரம்ப் வருத்தம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் மிகவும் மோசமான வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுவதாக அதிபர் ட்ரம்ப் ஜோ பிடனை விமர்சித்துள்ளார்.

3.இறந்ததாக கூறி சவப்பெட்டியில் அடைத்து வைக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

சேலம்: இறந்ததாக கூறி குளிர்சாதனப் பெட்டியில் அடைத்து வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

4. தெலங்கானாவில் கனமழை: 50 பேர் உயிரிழப்பு!

ஹைதராபாத்: தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக, இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

5."பண்டிகை காலங்களில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்" - கிரண்பேடி!

புதுச்சேரி: பண்டிகை காலங்களில் மக்கள் கரோனா பரவலில் இருந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.

6. மற்ற பிரிவினரிடமிருந்து பறித்து பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு இட ஒதுக்கீடு - சாடும் கே.எஸ்.அழகிரி

மருத்துவ மேற்படிப்புகளுக்கான தேர்வுகளிலும், வங்கிப் பணியாளர்கள் தேர்விலும் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு முறையை சாடி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

7. தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக்கோரி எம்பி ரவீந்திரநாத்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி தேனி தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

8. ஆளுநரின் முடிவு வரும்வரை கலந்தாய்வு இல்லை

7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் முடிவு தெரியும்வரை மருத்துவக் கலந்தாய்வு அறிவிக்கப்படாது என, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

9. கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது - ராகுல் பாராட்டு!

டெல்லி : இந்த ஆண்டு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 10.3 விழுக்காடு குறையும் என சர்வதேச நிதியம் கணித்துள்ள நிலையில், கரோனாவை இந்தியாவைவிட பாகிஸ்தான் சிறப்பாகக் கையாண்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

10. ’புற்று நோயிலிருந்து மிண்டு வருவேன்’ - சஞ்சய் தத்!

நடிகர் சஞ்சய் தத் விரைவில் புற்று நோயிலிருந்து மிண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details