தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச்சுருக்கம்.

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 19, 2021, 1:16 PM IST

1 +2 தேர்வு முடிவுகள் வெளியீடு

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

2 ஜூலை 26 முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி

தமிழ்நாட்டில் பிளஸ் 2 முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரிகளில் சேர ஜூலை 26ஆம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

3 கோவில்பட்டி இரும்பு கடை திருட்டு - 4 பேர் கைது

கோவில்பட்டியில் இரும்பு கடையின் மேற்கூரையை பிரித்து ரூ. 5 லட்சம் பணம், 2 டன் இரும்பு கம்பிகளை திருடிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

4 கரை ஒதுங்கிய ஐம்பொன் சிலைகள்- வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமா?

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை ஓரமாக ஐம்பொன் சிலைகள் கரை ஒதுங்கிய நிலையில், கடல் வழியாக ஐம்பொன் சிலைகளை கடத்த திட்டம் வகுக்கப்பட்டதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5 பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்க - கமல்ஹாசன் வலியுறுத்தல்

தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில், சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவது சவாலான விஷயம் அல்ல என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

6 பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் அமளி!

மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் தடுத்தனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

7 மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசிகள் - சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

மாநிலங்களிடம் 2.60 கோடி கோவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8 பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்- ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

9 டெலிபோன் ஒட்டுக்கேட்பு- மோடி அரசுக்கு சு.சுவாமி எச்சரிக்கை!

எதிர்க்கட்சி தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் உள்பட 300 இந்தியர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 கேரள அரசுக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு எச்சரிக்கை

ஈத் பண்டிகையை முன்னிட்டு கோவிட்-19 தளர்வுகள் அளிப்பது பொறுப்பற்றது என கேரள அரசுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details