தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @9pm - undefined

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்...

Top 10 news 9pm
Top 10 news 9pm

By

Published : Dec 10, 2020, 9:20 PM IST

நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் புதிய குழப்பம்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியான நிலையில் அதில் உள்ள தகவல்கள் முரண்பாடாக உள்ளதால் காவல்துறையினர் குழப்பம் அடைந்துள்ளனர்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: 1,424 இடங்கள் காலி

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 1,424 இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது.

எம்பி, எம்எல்ஏ-வை காணவில்லை' - போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பிய ஆர்.கே நகர் மக்கள்

சென்னை:ஆர்.கே நகரில் எம்பி, எம்எல்ஏ-வை காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் இடம்பெற்ற நிர்மலா சீதாராமன்!

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் மிகவும் சக்திவாய்ந்த பெண்மணிகளின் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

ஏழைகளின் உரிமைகளை பறிக்கும் மோடி அரசு - ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: ஏழை மக்களின் அடிப்படை உரிமைகளை மோடி அரசு பறிப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ஸ்பெயினில் 4 சிங்கங்களுக்கு கரோனா

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் பூங்காவில் வளர்க்கப்படும் நான்கு சிங்கங்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனா தடுப்பு மருந்து ஆய்வு: கூடுதலாக நிதியளித்த பில் கேட்ஸ்

நியூயார்க்: கரோனா பெருந்தொற்று தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள பில் கேட்ஸ் அறக்கட்டளை தற்போது கூடுதலாக 250 மில்லியன் டாலரை(1.8 ஆயிரம் கோடி ரூபாய்) வழங்கியுள்ளது.

சாலையோர கடைகளின் உணவுகளும் இனி வீடு தேடி வரும்... ஸ்விகியின் அடுத்த அதிரடி!

டெல்லி:பிரதமரின் சாலையோர வியாபாரிகள் ஆத்ம நிர்பார் நிதி திட்டத்தின் கீழ் விரைவில் 125 நகரங்களில் இருந்து சுமார் 36 ஆயிரம் சாலையோர உணவகங்களை ஸ்விக்கி தளத்தில் (swiggy) இணைக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் கோலி & ரோஹித்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details