தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9pm
top-10-news-9pm

By

Published : Sep 19, 2020, 9:26 PM IST

ஊரடங்கு காலத்தில் சிறப்பு ரயிலில் பயணித்தவர்களில் 97 பேர் உயிரிழப்பு!

டெல்லி: நாடு தழுவிய ஊடரங்கின்போது குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பல்வேறு உடல்நல பிரச்னைகளால் 97 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நகைக்கடையில் நஷ்டம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் தற்கொலை!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நகைக்கடையில் ஏற்பட்ட இழப்பு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடம்: முதலமைச்சர் திறந்துவைப்பு!

பள்ளிக் கல்வித் துறை சார்பில், 39 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக இன்று (செப். 19) திறந்துவைத்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து பெண் தற்கொலை!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமான இரண்டு குழந்தைகளின் தாயான பெண் ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சைப் பெற்று வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்!

டெல்லி : ”உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை. குறிப்பிட்ட சில வகுப்புகளில் இருந்து மட்டுமே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்” என திமுக எம்.பி வில்சன் மாநிலங்களையில் பேசியுள்ளார்.

தமிழ் அமைப்புகள் குறித்த உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்தால் சர்ச்சை!

சென்னை : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த கலை என்பவரின் பிணை மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இர்ஷாத் அஹ்மத் ரேஷியின் சொத்துக்களை முடக்கிய என்ஐஏ!

புல்வாமா தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் அஹமத் ரேஷியின் சொத்துக்கள், பயங்கரவாதிகளுக்கு வருமானம் தரும் வகையிலும், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் வகையிலும் இருந்ததாலும் முடக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் பாலா படத்தை விளம்பரப்படுத்தும் சிவகார்த்திகேயன்!

நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார்.

ஒருவரின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

13ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதுவதால், ஓய்வுக்குப் பிறகான தோனியின் மறுப்பிரவேசத்திற்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இத்தாலியன் ஓபன் 2020: காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய நடால்!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஃபேல் நடால் வெற்றி பெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

ABOUT THE AUTHOR

...view details