தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9pm
top-10-news-9pm

By

Published : Jul 27, 2020, 9:11 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 6,993 பேருக்கு கரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,993 பேருக்கு இன்று (ஜூலை.27) புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடன் தொல்லை: காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சென்னை: கடன் தொல்லை காரணமாக சிறப்பு உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

சுரேந்தர், கோபால் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

சென்னை: கறுப்பர் கூட்டம் சுரேந்தர், இந்து தமிழர் பேரவை கோபால் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்!

சென்னை: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

வெள்ளத்தின் மத்தியில் நற்செய்தி - இனப்பெருக்கத்தில் புலிகள்!

திஸ்பூர்: அஸ்ஸாமில் உள்ள கசிரங்கா தேசிய பூங்காவில் புலிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.

சமய மாநாடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த மத்திய அரசு

டெல்லி: சமய மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினர் 23 பேர் தங்களது சொந்த நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

'பாலிவுட்டில் எனக்கும் வாய்ப்பு தரவில்லை' - ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி குற்றச்சாட்டு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து, ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டியும் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

அனைத்திலும் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் - புகழ்ந்து தள்ளிய பாக். வீரர்!

மூன்று விதமான போட்டிகளிலும் விராட் கோலியே சிறந்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஜுனைத் கான் தெரிவித்துள்ளார்.

'ஜஸ்ட் 5,499 தான்' இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் தனது அடுத்த முயற்சியாக பட்ஜெட் பயனர்களுக்காக சாம்சங் கேலக்ஸி M01 கோர் (Samsung Galaxy M01 core) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே சீன நிறுவனம் பல பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையை ஆட்கொண்டு வருவது உங்களுக்கு தெரியுமா?

சீனாவை தலைமையிடமாகக் கொண்டு விளங்கும் பிபிகே எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒன்-ப்ளஸ் (OnePlus), ஒப்போ (Oppo), விவோ (vivo), ரியல்மீ, ஐக்யூ (iQOO) ஆகிய பெயர்களில் இந்திய கைப்பேசி சந்தையில் களமாடி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details