தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - 9 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 9 PM
TOP 10 NEWS 9 PM

By

Published : Jul 4, 2021, 9:03 PM IST

தமிழ்நாட்டில் நாளை கல்லூரிகள் திறப்பு!

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூலை 5) முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன.

TN Unlocked: தமிழ்நாடு முழுவதும் ஆரம்பம்

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூலை.5) முதல் கல்லூரிகள், பேருந்துகள், டாஸ்மாக் கடைகள், கோயில்கள் உள்பட அனைத்து செயல்பாடுகளுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அமலாகின்றன.

மீன்வரத்துக் குறைவால் வருத்தத்தில் மீனவர்கள்: டீசல் விலை குறித்து அரசிடம் கோரிக்கை!

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் கரோனா பரவலைத் தடுக்க மீன் சந்தையில் மொத்த வியாபாரம் ஒரு இடத்திலும், சில்லறை வியாபாரம் வேறொரு இடத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து டீசல் விலையைக் குறைக்க தமிழ்நாடு அரசிடம் மீனவர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்வு: சூர்யாவைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றிய பாஜக

நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா பொய்களைப் பரப்பிவருவதாக பாஜக மாநில இளைஞரணிச் செயலாளர் வினோஜ் செல்வம் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் திரெட்ஸ் போல ஃபேஸ்புக் பயனர்களுக்கு புதிய அம்சம்!

ட்விட்டர் தளத்தில் இருக்கும் 'திரெட்ஸ்' போன்ற அம்சத்தினை ஃபேஸ்புக் சோதனை செய்து வருகிறது. இதன்மூலம் முதல் பதிவிற்கு ஏற்ற பிற பதிவுகளையும் தனியாக ஒன்றன்கீழ் ஒன்றாக இணைத்துக் கொள்ளமுடியும்.

நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு முழுவதும் நாளை (ஜூலை 5) முதல் 50 விழுக்காடுப் பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

NIPUN புதிய கல்வி திட்டத்தை தொடங்கி வைக்கும் அமைச்சர்

நாட்டின் பள்ளிக் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக NIPUN Bharat என்ற புதிய திட்டத்தை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தொடங்கிவைக்கிறார்.

வைரலாகும் ஹன்சிகாவின் “மஹா” திரைப்பட டீஸர் !

மஹா படத்தின் டீஸர் வெளியான 2 நாளில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

ஆலமர உச்சியில் ஆன்லைன் வகுப்பு: விஞ்ஞானம் தொட்ட உச்சம்

செல்போன் சிக்னல் கிடைக்காததால் ஆபத்தான முறையில், ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் கவனிக்கின்றனர்.

'ரவுடி பேபி சூர்யா, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுங்க' - மகளிர் அமைப்பு

சமூக வலைதளமான யூ-ட்யூபில் பாலுணர்வைத் தூண்டும் வகையில் உடையணிந்தும், ஆபாசமாகப் பேசியும் காணொலிகளைப் பதிவேற்றம் செய்து வரும் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, ஜி.பி. முத்து உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மகளிர் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details