தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9pm - ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்...

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்

By

Published : Apr 19, 2021, 9:37 PM IST

1. சென்னையில் 3.90 கோடி ரூபாய் அபராதம் வசூல்!

சென்னை: தகுந்த இடைவெளியைப் பின்பற்றாதவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் ஆகியோரிடமிருந்து நேற்று வரை 3.90 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

2. 'கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தளர்வுகளை அறிவிக்க வேண்டும்'

திண்டுக்கல்: கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்குத் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் செந்தில்குமார் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

3. கந்துவட்டி தொடர்பான படம் - கார்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கு ரத்து

மதுரை: கந்துவட்டி கொடுமை சம்பவம் தொடர்பாக கார்ட்டூன் வரைந்த புகாரில் பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

4. மல்லியோ மணக்கிறது! உற்பத்தி செய்தவனின் மனமோ வாடுகிறது!

மதுரை: மல்லிகை விலை கிடுகிடுவென சரிந்தது. தற்போது கிலோ ரூ.150-க்கு விற்பனைசெய்யப்படுகிறது. விழா காலமாக இருந்தபோதும் கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

5. 2ஆம் கட்ட தடுப்பூசி போட முடியாமல் மக்கள் வருத்தம்

கன்னியாகுமரி: கரோனா தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், தடுப்பூசி குறைவால் இரண்டாம் கட்ட தடுப்பூசி போடமுடியாமல் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

6. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி!

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

7. டெல்லி நீதிமன்ற நீதிபதி கோவை வேணுகோபால் கரோனாவால் உயிரிழப்பு!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட டெல்லி நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, கோவை வேணுகோபால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

8. 72 மணிநேரத்தில் தலைமைச் செயலக அலுவலர்கள் 4 பேர் உயிரிழப்பு!

கடந்த 72 மணிநேரத்தில் ஆந்திர மாநிலத் தலைமைச் செயலக ஊழியர்கள் நான்கு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் நேற்று (ஏப்ரல் 18) ஒருநாள் மட்டும் 6,582 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

9. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கரோனா!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10. தன்னலமற்ற மருத்துவருக்கு உதவிக்கரம் நீட்டிய ம.பி. அரசு!

போபால்: முன்களப் பணியாளரான மருத்துவர் சத்யேந்திர மிஸ்ராவுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர் மத்தியப் பிரதேசத்திலிருந்து ஹைதராபாத்திற்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details