தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள் Top 10 news @9am - ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 News 9 PM
Top 10 News 9 PM

By

Published : Feb 17, 2021, 9:56 PM IST

1.கரோனா டைம்ல பெட்ரோல் விலை ஏறுறது சகஜமப்பா - அளந்துவிட்ட எல். முருகன்

கரோனா தாக்கம் உலகம் முழுவதும் நிலவி வரும் சூழலில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதைப் போல, பெட்ரோல் டீசல் விலையும் ஏற்றம் கண்டுவருவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

2.சென்னை ஐஐடியின் உலகத்தர டிஸ்கவரி ஆய்வகம்!

கப்பல் இயக்கும் பயிற்சி அளிக்கவும், கடல்சார் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் சென்னை ஐஐடியில் உலகத்தரத்தில் டிஸ்கவரி ஆய்வகம் அமைக்கப்படவுள்ளது.

3.தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: ரவிசங்கர் பிரசாத்

தொலைத்தொடர்பு சாதன உற்பத்தி திட்டத்திற்கு ரூ.12,195 கோடி ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

4.'இசை தமிழ் நீ செய்த அருட்சாதனை' - கிளியின் மைன்ட் வாய்ஸ்

குயில் பாட்டு, அலையோசை என இந்த பிரபஞ்சமே இசையோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
5.பிரதமர் அலுவலக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் மோசடியில் தொடர்பு!

பிரதமர், ஆளுநர் அலுவலகப் பெயர்களை பயன்படுத்தி நூறு கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகத்தில் வேலை பார்த்த ஒய்வு பெற்ற இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மூளையாக செயல்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

6.'பஸ்ஸ நிறுத்துறியா! மல்லாக்க படுக்கவா!' - 'ஏய்' வடிவேலுவை மிஞ்சிய போதை ஆசாமி!

ஏய் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேருந்துக்குள் செய்த ரகளையை தென்காசியில் போதை ஆசாமி ஒருவர் செய்தது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

7.‘உங்களுக்கு ஆரத்தி கூட எடுக்க விடல’ - கனிமொழி முன் கண்கலங்கிய அருந்ததியர் சமுதாய பெண்!

பென்னாகரம் அருகே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்ததால் உங்களுக்கு ஆரத்தி எடுக்கக்கூட அனுமதிப்பதில்லை என கண்ணீர் மல்கக் கூறிய பெண்ணை, திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி கட்டி தழுவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

8.மைக்ரோசாஃப்ட் எக்ஸ்- பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் சிறப்பம்சங்கள்!

புதிய மைக்ரோசாஃப்ட் எக்ஸ் பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 15 மணிநேர மின்கல சேமிப்புத் திறன், சுற்றும் வசதிகொண்ட இயர் கப்ஸ், துல்லியமான ஒலியமைப்பு என இதன் சிறப்பம்சங்கள் உள்ளது.

9.'ஆக்ஷன் கிங்' அர்ஜுன் உறவினரின் 'செம திமிரு' இசை வெளியீடு!

நடிகர் அர்ஜுனின் உறவினர் நடித்துள்ள 'செம திமிரு' படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று (பிப்ரவரி 17) நடைப்பெற்றது.

10.ஆஸ்திரேலியன் ஓபன்: நடால் கனவை தகர்த்த சிட்சிபாஸ்

முதல் இரண்டு செட்களை கைப்பற்றிய பின்னரும் சிட்சிபாஸின் சவாலான ஆட்டத்தின் காரணமாக சுமார் நான்கரை மணி நேரம் போராடி தோல்வியடைந்தார் முன்னணி வீரர் ரபேல் நடால்.

ABOUT THE AUTHOR

...view details