தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-9-pm
top-10-news-9-pm

By

Published : Sep 20, 2020, 9:23 PM IST

தமிழ்நாட்டில் மேலும் 5,516 பேருக்கு கரோனா உறுதி; 60 பேர் உயிரிழப்பு!

தமிழ்நாட்டில் மேலும் 5,516 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993ஆக அதிகரித்துள்ளது.

ஐபிஎல் 2020: டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது பஞ்சாப் அணி!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,811ஆக உயர்வு!

சென்னை : இன்று (செப்.20) மட்டும் 5,516 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 993ஆக அதிகரித்துள்ளது.

10ஆம் வகுப்புத் தனித் தேர்வுக்குத் தடையில்லை - உயர் நீதிமன்றம்

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தனித் தேர்வர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

முகமூடி அணிந்து மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து சூறையாடிய கும்பல்

கன்னியாகுமரி : நாகர்கோவிலைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் அத்துமீறி புகுந்த முகமூடி அணிந்த கும்பல், நோயாளிகளை மிரட்டி மருத்துவமனையை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள்: தருமபுரியில் அன்பழகன் பேச்சு!

தருமபுரி: குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பிளாக் விடோவை மிஞ்ச வருகிறார் ’எலனா’

’பிளாக் விடோ’ திரைப்படத்தில் தன்னுடன் நடித்து வரும் சக நடிகை ஃப்ளோரன்ஸ் பக், அவரது கதாபாத்திரத்தில் திறம்பட நடித்து, மேற்கொண்டு பிளாக் விடோ திரைப்பட சீரிஸை நகர்த்திச் செல்வார் என ஸ்கார்லெட் ஜோஹன்சன் தெரிவித்துள்ளார்.

'பிசாசு 2' திரைப்பட அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மிஷ்கின்!

பிசாசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கின் 'பிசாசு 2' பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்? நிதியமைச்சகம் கூறுவது என்ன?

டெல்லி: 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பதை நிறுத்தும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு தற்போது இல்லை என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்வின் போது சத்தம் வந்தால் மாணவர்கள் வெளியேற்றப்படுவர்! அண்ணா பல்கலைக்கழகம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக இணையவழித் தேர்வு நடைபெறுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வெழுதும் இடத்தில் தேவையற்ற சத்தம் எழுந்தால் மாணவர்களின் தேர்வு செல்லாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details