தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 24, 2020, 9:00 PM IST

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-9-pm
top-10-news-9-pm

ஜூலை 24: எரிசக்தி, ஐடி துறை பங்குகளின் இறக்கத்தால் தள்ளாட்டத்தில் முடிந்த பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தக நாள் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 11.57 புள்ளிகள் குறைந்து 38,128.90 புள்ளிகள் என வர்த்தகம் நிறைவுற்றது.

எச்சரிக்கை: வங்கி கணக்குகளை பின்தொடரும் ‘ஜோக்கர்’ மால்வேர்!

சைபர் குற்றங்களில் ஈடுபடும் ‘ஜோக்கர்’ மால்வேர் கைப்பேசி, கணிணிகளில் இருந்து வங்கி தகவல்களை எப்படி திருடுகிறது என்பதை மகாராஷ்டிரா சைபர் கிரைம் துறை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 1.5 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனை!

டெல்லி: இந்தியாவில் இதுவரை 1.5 கோடிக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

"வெளியுறவுத் துறையின் அறிக்கை எல்லையில் சீனா ஊடுருவியுள்ளது என்பதற்கான ஆதாரம்" - சிதம்பரம்

டெல்லி: படைகளை திரும்பபெறும் நடவடிக்கையில் சீனா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை எல்லை பகுதியில் சீனா ஊடுருவியுள்ளது என்பதற்கான மற்றொரு ஆதாரம் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பம்பரமாக சூழலும் பாட்டி: காணொலி வைரல்!

மகாராஷ்டிரா மாநிலம், புனே பகுதியைச் சேர்ந்தவர் சாந்தாபாய் பவார்(85), தனது வயிற்றுப் பிழைப்புக்காக தெருக்களில் சிலம்பம் சுற்றி வித்தைக் காட்டிவருகிறார்.

சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் நடிகர் ரஜினிக்கு அபராதம்

சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்றபோது சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதற்காக நடிகர் ரஜினிகாந்த்க்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குருவி கூட்டை கலைக்க மனமில்லை: கும்மிருட்டில் வாழும் கிராம மக்கள்!

சிவகங்கை: குஞ்சுகளை ஈன்ற குருவிக்காக ஒரு மாதத்திற்கு மேல் தெருவிளக்கு மின்சாரத்தை பயன்படுத்தாமல் உயிர் நேயம் காத்த பொத்தக்குடி கிராமத்து மக்களுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிகிறது.

திருமாவளவன் குறித்து அவதூறு, காயத்ரி ரகுராம் மீது புகார்!

சென்னை : விசிக தலைவர் தொல். திருமாவளவன் குறித்து அவதூறாக விமர்சித்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல் ஆணையரிடம் வழக்குரைஞர் பன்னீர் செல்வம் புகார் அளித்துள்ளார்.

உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா!

நடிகை தமன்னா யோகா செய்யும் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் தகவல்களை திருடிய ஹேக்கர்கள்!

லண்டன்: பிளாக்பாட் என்ற தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எட்டு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் சைபர் குற்றவாளிகள் திருடியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details