தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்..

மாலை 7 மணி செய்திச் சுருக்கம்
மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Dec 16, 2020, 7:16 PM IST

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு: தமிழ்நாட்டில்தான் கடைசி

திருவாரூர்: 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அமல்படுத்தும் கடைசி மாநிலம் தமிழ்நாடுதான் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

கரோனா பாதிப்புக்கு இழப்பீடு கோரி மனு: மத்திய-மாநில அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: கரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'ஆலமரம்போல் திமுக உள்ளது; எந்தப் பிரச்னையும் இல்லை'- தமிழச்சி தங்கப்பாண்டியன்

பல்வேறு பிரச்னைகளை சந்தித்து ஆலமரம்போல் திமுக உள்ளதாகவும், யார் கட்சியில் இணைந்தாலும், கட்சியைவிட்டு வெளியேறினாலும், எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அலைக்கற்றை ஏலத்தில் விட அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: அடுத்தக்கட்ட அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

போலி டிஆர்பி விவகாரம் - ரிபப்ளிக் சேனல் தலைமை செயல் அதிகாரிக்கு பிணை

போலி டிஆர்பி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் சேனல் தலைமை செயல் அலுவலர் விகாஸ் காஞ்சந்தனிக்கு பிணை வழங்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டு குறியீடு - 131ஆவது இடத்தில் இந்தியா

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள மனிதவள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது.

புக்கோவ்ஸ்கி குறித்து கவலையாக உள்ளது - ஜஸ்டின் லாங்கர்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தின்போது காயமடைந்த தொடக்க வீரர் வில் புக்கோவ்ஸ்கி மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது கவலையாக உள்ளதென ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

‘சீசனின் முதல் வெற்றிக்காக காத்திருக்கிறோம்’ - அர்ஷ்தீப் சிங்

நடப்பு ஐஎஸ்எல் சீசனில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்ய உத்தேவகத்துடனும், ஆவலுடன் காத்திருப்பதாக ஒடிசா எஃப்சி அணியின் கோல் கீப்பர் அர்ஷ்தீப் சிங், ஈடிவி பாரத்துடனான உரையாடலின் போது தெரிவித்தார்.

மாஸ்டர் தெலுங்கு டீசர் நாளை வெளியீடு!

விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' படத்தின் தெலுங்கு டீசர் நாளை (டிசம்பர் 17) வெளியாகிறது.

அப்போ 'சில்க்'... இப்போ 'ஷகிலா'... பாலிவுட்டில் வெளியான ட்ரெய்லர்!

ஹைதராபாத்: ரிச்சா சதா நடிப்பில் உருவாகியுள்ள 'ஷகிலா' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details