தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 17, 2020, 7:04 PM IST

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-7pm
top-10-news-7pm

தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 538 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை17) நான்கு ஆயிரத்து 538 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 907ஆக அதிகரித்துள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜூ டிஸ்சார்ஜ்!

சென்னை: தனியார் மருத்துவமனையில் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பினார்.

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்த தலைவர் தந்தை பெரியார் - மு.க.ஸ்டாலின்!

சென்னை : எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கும் தன் பேனாவைக் கொடுத்து எழுதச் சொல்லி மாற்றுக் கருத்துகளையும் மதித்து பதிலளித்து, சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

'தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்' உயர் நீதீமன்றம்

சென்னை: தனியார் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணம் வசூலிக்கலாம் என உயர் நீதீமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராணுவ வீரர்களுடன் உரையாடிய பாதுகாப்புத் துறை அமைச்சர்

எல்லைப் பகுதிக்கு சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ராணுவ வீரர்களிடம் கேட்டறிந்தார்.

மும்பையில் பட்டப்பகலில் கத்தி முனையில் வங்கியில் கொள்ளை

மும்பை: பட்டப்பகலில் நவி மும்பைப் பகுதியில் அமைந்துள்ள வங்கியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத இருவரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

தொடர்ந்து உயரும் டீசலின் விலை - பெரும் சிக்கலில் போக்குவரத்துத் துறை!

டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதால் போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான் அதிருப்தி எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் - அதிரடி காட்டும் காங்கிரஸ்!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சச்சின் பைலட்க்கு ஆதரவு தெரிவித்த இரண்டு அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை காங்கிரஸ் இடைநீக்கம் செய்துள்ளது.

விஷ்ணு விஷாலுக்கு பிறந்தநாள் பரிசு கொடுத்த 'எஃப்.ஐ.ஆர்' படக்குழு!

விஷ்ணு விஷால் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

மார்ச், ஏப்ரலில் பணப்புழக்கம் அதிகரிப்பு -ஆர்பிஐ தகவல்!

மும்பை: மார்ச், ஏப்ரல் மாதங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவர தகவல்கள் வாயிலாக அறியமுடிகிறது.

ABOUT THE AUTHOR

...view details