தமிழ்நாடு

tamil nadu

7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 7pm

By

Published : Feb 11, 2021, 7:02 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 News 7 PM
Top 10 News 7 PM

  • கண்ணை மறைத்த பக்தி: தன்னை தானே குழிக்குள் புதைத்துக் கொண்ட பெண்!

கடவுளிடம் முறையிட போறேன் என உத்தரப் பிரதேச பெண் ஒருவர் தன்னை தானே குழிக்குள் புதைத்துக் கொண்டுள்ளார்.

  • தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கமல்ஹாசன் வலியுறுத்தல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள கடன்கள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • மோசடிக்கும்பலின் வங்கிக் கணக்குகளை முடக்க முடிவு!

எம்.பி சீட் வாங்கித்தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலின் வங்கிக் கணக்குகளை முடக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது.

  • ஜவான்களின் தியாகத்தை மத்திய அரசு 'அவமதிக்கிறது' - ராகுல் காந்தி

இந்தியா - சீனா எல்லை பிரச்னையில் படைகளை திரும்பப் பெறுவது, இந்திய ஜவான்களின் தியாகத்தை மத்திய அரசு 'அவமதிக்கும் செயலாகும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  • தனது சொந்த செலவில் சாலை அமைத்து கொடுத்த பஞ்சாயத்து தலைவர்!

25 ஆண்டுகளாக சாலை இல்லாத கிராமத்திற்கு பஞ்சாயத்து தலைவா் ஒருவர் தனது சொந்த செலவில் தனியாரிடமிருந்து நிலம் வாங்கி சாலை அமைத்து கொடுத்துள்ளார்.

  • வீடு திரும்பினார் சூர்யா - நடிகர் கார்த்தி ட்வீட்!

கரோனா சிகிச்சை எடுத்துக்கொண்ட நடிகர் சூர்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் என்று அவரது தம்பி நடிகர் கார்த்தி ட்வீட் செய்துள்ளார்.

  • மாற்றுத்திறனாளி புதுப்பெண்ணுக்கு காவல் துறை உதவிக்கரம்

ஆதரவற்ற மாற்றுத்திறனாளி புதுமண பெண்ணுக்குக் காவல் துறையினர் ஒன்றிணைந்து சீர் வரிசை பொருட்களை வழங்கி அசத்தியுள்ளனர்.

  • நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை

கடலுக்கு அடியில் நிலநலடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, வடக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிஜி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 'நீங்கள் எடுத்த முடிவு சரிதான்... நான் உங்களுடன் இருக்கிறேன்' - அனில் கும்ப்ளே

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் பதிவிட்ட ட்விட்டர் பதிவிற்கு தனது ஆதரவை வழங்குவதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

  • விஜய் ஹசாரே கோப்பை: தமிழ்நாடு அணியிலிருந்து நடராஜன் விடுவிப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு நடராஜன் தேவைப்படுவார் என பிசிசிஐ கேட்டுக்கொண்டதையடுத்து, விஜய் ஹசாரே கோப்பைக்கான தமிழ்நாடு கிரிக்கெட் அணியிலிருந்து நடராஜன் விடுவிக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details