தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @ 7pm - முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்தி சுருக்கம்...

7 மணி செய்தி சுருக்கம்
7 மணி செய்தி சுருக்கம்

By

Published : Jan 9, 2021, 7:49 PM IST

ஜனவரி 16 முதல் நாட்டில் கரோனா தடுப்பூசி - மத்திய அரசு

வரும் 16ஆம் தேதிமுதல் நாட்டில் கரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவில் சிறப்புரையாற்றவுள்ள பிரதமர் மோடி!

தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு உரையாற்றுவார் என மத்திய கல்வித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிறைக் கைதிகளை உறவினர்கள் நேரில் காண ஜன. 14 முதல் அனுமதி!

சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரடியாக காண வருகின்ற 14ஆம் தேதிமுதல் அனுமதிக்கப்படுவார்கள் எனச் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தெரிவித்துள்ளது.

'கருணாநிதியின் மகனா என யோசிக்கும் அளவுக்கு நிதானம் இழந்துபேசும் ஸ்டாலின்!'

திமுக தலைவர் ஸ்டாலின் நிதானம் இழந்து பேசுவதாகவும், கருணாநிதி போன்று பேசுவதில்லை என்று பாஜக செயற்குழு உறுப்பினரும் நடிகருமான ராதாரவி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கரோனா தடுப்பூசிகள் - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டு கரோனா தடுப்பூசிகள் மூலம், மனித உயிர்களைக் காக்க நாடு தயாராகவுள்ளதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

33 கி.மீ. தூரம் ஸ்கேட்டிங் பயணம்: கரோனா விழிப்புணர்வு செய்த மாணவர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பாலம் முதல் அரிச்சல் முனை வரை 33 கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து மூன்று மாணவர்கள் கரோனா விழிப்புணர்வு மேற்கொண்டனர்.

‘இது தொடர்பாக ட்ரம்பிடம் தொலைபேசி வழியே பேசுவேன்’ - ராம்தாஸ் அத்வாலே

மக்களாட்சித் தத்துவத்தை அவமதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் வாய்ப்பிருந்தால் தொலைபேசி வழியே பேசுவேன் என மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

அமெரிக்கா, இங்கிலாந்து தடுப்பூசிகளுக்குத் தடை - ஈரான் மதகுரு அறிவிப்பு!

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி தடைவிதித்துள்ளார்.

62 பேருடன் காணாமல்போன இந்தோனேசியா விமானம்!

இந்தோனேசியாவில் 56 பயணிகள், ஆறு பணியாளர்களுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் உயிரிழப்பு - பாகிஸ்தான் முன்னாள் தூதர் தகவல்

இந்திய விமானப் படையின் பாலகோட் தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக, பாகிஸ்தான் முன்னாள் தூதர் ஷாஃபர் ஹிலாலி தெரிவித்துள்ளார்

ABOUT THE AUTHOR

...view details