தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 7 PM
TOP 10 NEWS 7 PM

By

Published : Oct 29, 2020, 7:16 PM IST

புல்வாமா தாக்குதலை மேற்கொண்டது நாங்கள் தான் - ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்

பாகிஸ்தான் அமைச்சர் பஃஹத் செளத்ரி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புல்வாமா தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான் தான் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

தொடர் சரிவில் இந்தியப் பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

வட கிழக்கு பருவ மழை எப்படி இருக்கும் - வெதர் மேன் விளக்கம்

சென்னை: வட கிழக்கு பருவ மழை என்றாலே இரவு முதல் அதிகாலை வரை பெய்யும் தன்மை கொண்டது எனவும் இடைவெளி விட்டே மழை இருக்கும் எனவும் தமிழ்நாடு வெதர் மேன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சி விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும் - மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்த அதிமுக ஆட்சி விரைவில் விவசாயிகளாலேயே விரட்டி அடிக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் பக்கம் சாய்கிறாரா மாயாவதி? - பிரியங்கா காந்தி விமர்சனம்

டெல்லி : ”சமாஜ்வாதி கட்சியைத் தோற்கடிக்க பாஜகவுக்குகூட வாக்களிப்போம்” என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்: வழக்கை முடித்து வைத்த நீதிபதி

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் கபில் மிஷ்ரா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட காரணத்தால் இது குறித்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.

‘விளையாட்டு குறித்த உரையாடல் சிறப்பாக அமைந்தது’ - சுரேஷ் ரெய்னா!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இன்று மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை நேரில் சந்தித்து உரையாடினார்.

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்துவீச்சு!

சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னையில் மழை: விழித்தெழுமா மாநில தலைநகர்...!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு (அக். 28) முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வெங்காயத்தால் முட்டைகோஸுக்கு வந்த வாழ்வு!

ஈரோடு: சத்தியமங்கலத்தில் வெங்காயத்துக்கு மாற்றாக முட்டைகோஸின் தேவை அதிகரித்துள்ளதால் முட்டைகோஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details