தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 28, 2020, 7:01 PM IST

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 7 PM
TOP 10 NEWS 7 PM

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,589 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 589 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் சீமான் மருத்துவமனையில் அனுமதி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விவசாயிகளை ஏமாற்றும் விஷவாயு எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் கடும் தாக்கு

தான் விவசாயி என்று கூறி கொண்டு விவசாயிகளை ஏமாற்றி கொண்டிருக்கும் விஷவாயுதான் எடப்பாடி பழனிசாமி என திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஸ்ரீரங்கம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எஸ்பிபிக்கான மருத்துவக் கட்டண சர்ச்சை: எஸ்பிபி சரண் விளக்கம்

மறைந்த பாடகர் எஸ்பிபிக்கான மருத்துவக் கட்டணம் தொடர்பாக பல கருத்துகள் சமூக வலைதளங்களில் உலாவிவந்த நிலையில், அதுகுறித்து எஸ்பிபி சரண் விளக்கம் கொடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்!

கோயம்புத்தூரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக, கொங்குநாடு மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

'கரோனா வந்தால் மம்தாவை ஓடிப்போய் கட்டிப்பிடிப்பேன்' - பாஜக தேசிய செயலாளர்!

எனக்கு கரோனா வந்தால், முதலமைச்சர் மம்தா பானர்ஜியை ஓடிப்போய் கட்டிப்பிடிப்பேன் என, பாஜக தேசிய செயலாளர் அனுபம் ஹஸ்ரா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது' - உச்ச நீதிமன்றத்தில் யுபிஎஸ்சி திட்டவட்டம்!

சிவில் சர்வீஸ் தேர்வு ரத்து செய்வது தொடர்பான வழக்கில் தேர்வை ஏன் ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பட்டியலிட்டு நாளை (செப்.29) பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யுமாறு யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்களை ஏமாற்றிய வழக்கு: கன்னியாகுமரி காசியின் நண்பரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம்!

கன்னியாகுமரியில் பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைதான காசியின் நண்பரை பிடிக்க சிபிசிஐடி அலுவலர்கள் இன்டர்போல் உதவியை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய வாவ்ரிங்கா, ஸ்வெரவ்!

பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்டான் வாவ்ரிங்கா, அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details