தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-7-pm
top-10-news-7-pm

By

Published : Sep 19, 2020, 7:45 PM IST

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச முடிவு!

இந்தியன் பிரிமியர் லீகின் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

உலகளவில் கரோனா தாக்கம்!

உலகளாவிய கரோனா தொற்று எண்ணிக்கை மூன்று கோடியே ஆறு லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

அரூரில் அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுக, அமமுகவினர்!

தருமபுரி: அரூரில் திமுக, அமமுக கட்சியினர் அமைச்சா் கே.பி. அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

இர்ஷாத் அஹ்மத் ரேஷியின் சொத்துக்களை முடக்கிய என்ஐஏ!

புல்வாமா தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட இர்ஷாத் அஹமத் ரேஷியின் சொத்துக்கள், பயங்கரவாதிகளுக்கு வருமானம் தரும் வகையிலும், தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகளை மேம்படுத்த உதவும் வகையிலும் இருந்ததாலும் முடக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை - திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன்!

டெல்லி : ”உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பன்முகத்தன்மை இல்லை. குறிப்பிட்ட சில வகுப்புகளில் இருந்து மட்டுமே நீதிபதிகள் நியமிக்கப்படுகின்றனர்” என திமுக எம்.பி வில்சன் மாநிலங்களையில் பேசியுள்ளார்.

ரூ.50 லட்சம் மதிப்பிலான இடத்தை அபகரிக்க முயற்சி: 4 பேர் கைது

நெல்லை: போலி ஆவணங்கள் மூலம் 50 லட்சம் மதிப்பிலான இடத்தை அபகரிக்க முயன்ற நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆட்டம் முடிகிறது; ஆறு மாதத்தில் விடிகிறது - ஸ்டாலின்

சென்னை: அதிமுக அரசின் கபட வேடம் அதிகக் காலம் நீடிக்காது எனவும் ஆறு மாதத்தில் விடியும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பார்சலில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா: பொறிவைத்துப் பிடித்த போலீஸ்!

சென்னை: பார்சலில் கடத்தப்பட்ட நான்கு கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பொறிவைத்துப் பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

‘நீட் தேர்வை கண்டித்து பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும்’- நாராயணசாமி வேண்டுகோள்!

புதுச்சேரி: மாணவர்கள், சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி நடத்தப்படும் நீட் தேர்வை எதிர்த்து பொதுமக்கள் குரல் கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

ஏப்ரல் 2021-க்குள் அனைத்து அமெரிக்கர்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் - ட்ரம்ப் உறுதி...!

வாஷிங்டன்: 2021 ஏப்ரல் மாதத்திற்குள் ஒவ்வொரு அமெரிக்க குடிமகனுக்கும் கரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்க அரசு வழிவகை செய்யும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details