தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-7-pm
top-10-news-7-pm

By

Published : Jul 28, 2020, 7:32 PM IST

வெவ்வேறு விபத்துகளில் இறந்த நபர்களுக்கு நிதியுதவி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு விபத்தில் சிக்கி மறைந்த 31 நபர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து 1 லட்சம் ரூபாய் நிதி உதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

30ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர் கூட்டம்!

திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வருகின்ற 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கறுப்பர் கூட்டத்திற்கு பாஜக மாநில இளைஞர் அணி எதிர்ப்பு!

கோவை: பாஜக மாநில இளைஞர் அணியைச் சேர்ந்த பெண்கள் கந்தவேலை கையில் வரைந்து கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பொதுமக்கள் தனித்திருக்க வேண்டும் - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

திருவள்ளூர்: பொதுமக்கள் தனித்திருப்பதன் மூலம் கரோனா வைரஸ் தொற்றை ஒழிக்க முடியும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கரோனா காரணமாக ஆரம்ப கல்வி இல்லாமல் தவிக்கும் 40 மில்லியன் குழந்தைகள் - யுனிசெப் அதிர்ச்சி தகவல்

கரோனா காரணமாக ஆரம்ப கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், அதன்விளைவாக 40 மில்லியன் குழந்தைகள் தவித்துவருகின்றனர் என யுனிசெப் அமைப்பு அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்காக குரல் கொடுத்த கடைக்குட்டி சிங்கம்!

சென்னை: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என நடிகர் கார்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அயோத்தி கோயில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்: ரா எச்சரிக்கை!

டெல்லி: அயோத்தி ஸ்ரீராமர் ஜென்ம பூமி கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளளது.

15 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

டெல்லி: நாட்டில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்து 83 ஆயிரத்து 157ஆக அதிகரித்துள்ளது.

ப்யூன் வேலைக்கு விண்ணப்பித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன்!

டெல்லி: இந்தியா மாற்றத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் சைன், தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் ப்யூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார்.

ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு!

உலகளவில் நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் 2,16, 856 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 66 லட்சத்து 29 ஆயிரத்து 650ஆக அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details