தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 26, 2020, 7:07 PM IST

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-7-pm
top-10-news-7-pm

தமிழ்நாட்டில் மேலும் 6,986 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,986 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

சிறப்பு விமானங்கள் மூலம் சென்னை வந்த 351 இந்தியர்கள்!

சென்னை: சிங்கப்பூர், உக்ரைன், இலங்கை ஆகிய நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களில் 351 பேர் இன்று சென்னை வந்தடைந்தனர்.

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்!

சென்னை: சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி தேவையில்லை என்று புதிய அறிவிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கார்கில் போர்: பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியில் வென்ற இந்தியா

பாகிஸ்தானுக்கு உள்பட்ட எல்லைப் பகுதிக்குள் செல்ல இந்தியா ஒருபோதும் நினைத்ததில்லை. முன்னாள் ராணுவ தளபதி வி.பி. மாலிக், தான் எழுதிய இந்திய ராணுவ மோதல்களும் ராஜதந்திரமும் என்ற புத்தகத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

'அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது' - ஏ.ஆர்.ரஹ்மான்

நம் வாழ்வில் இழந்த நேரம் திரும்ப வராது, அதனால் அமைதியாக கடந்து செல்வதே சிறந்தது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

'ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலிதான் சரியான நபர்' - சங்ககாரா

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்குச் சரியான நபராக இருப்பார் என இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககாரா கூறியுள்ளார்.

சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த புதிய தூதர்களை நியமித்த இந்தியா!

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்துடன் சீனா பாதுகாப்பு சார்ந்த திட்டங்களில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவருவது, தெற்கு சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவது, தலிபான்களைக் கையாளுவது ஆகிய பிரச்னைகளைக் கையாளும் விதமாக இந்தியாவின் புதிய தூதரக நியமனங்கள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அரூனிம் புயான் கூறுகிறார்.

கரையைக் கடந்த ஹன்னா புயல்!

வாஷிங்டன்: டெக்சாஸ் மாகாணத்தில் நிலை கொண்டிருந்த ஹன்னா புயல் கரையைக் கடந்தது.

பயங்கரவாதத்தை அடக்க ஐ.நாவிடம் உதவி கோரும் ஆப்கன்

ஜெனீவா: நாட்டில் நுழைந்துள்ள பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளைத் தடுக்க ஐ.நாவிடம் ஆப்கன் உதவி கோரியுள்ளது.

கறுப்பர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் சுட்டுக் கொலை

வாஷிங்டன்: ஆஸ்டின் நகரில் நடைபெற்ற கறுப்பர்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவரை அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

ABOUT THE AUTHOR

...view details