தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 7 மணி செய்தி
ஈடிவி பாரத் 7 மணி செய்தி

By

Published : Jul 25, 2020, 7:02 PM IST

தமிழ்நாட்டில் இன்று 7 ஆயிரத்தை நெருங்கிய கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 6,998 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

'வேதா நிலையம் எங்கள் பூர்வீக சொத்து' ஜெ. தீபா

சென்னை: வேதா நிலையம் எங்கள் பூர்வீக சொத்து என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா தெரிவித்துள்ளார்.

'ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக்குவது மக்களின் எண்ணம்' - அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு மக்களின் எண்ணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

'ஏன் தேர்வான காவலர்களை நியமிக்க அரசு தயங்குகிறது?' - கமல்ஹாசன்

சென்னை: கரோனா காலத்தில் காவலர்களின் பணிச்சுமை அதிகரிக்கும் சூழலில் தேர்வான காவலர்களை நியமிப்பதில் ஏன் தாமதமாகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறான செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வேன் -ஞானவேல் ராஜா

சென்னை: பண மோசடி தொடர்பான தவறான செய்திகளை ஒளிபரப்பும் ஊடக நிறுவனங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்வேன் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு எதிரொலி: பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துவரும் மெட்ரோ!

கரோனா ஊரடங்கால் டெல்லி மெட்ரோ பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. ஜப்பான் முதலீட்டாளர்களுக்கான கடனை அடைப்பதற்காக மத்திய அரசை நாடியிருக்கிறது மெட்ரோ நிர்வாகம்.

'ஏழு நாள்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்' - முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: ஏழு நாள்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள், அலுவலர்கள் ஆகியோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர் குறித்து அவதூறு- நடிகை வனிதா மீது புகார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் குறித்து சர்ச்சையாக கருத்து கூறிய நடிகை வனிதாவுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

பயனர்களுக்கு எந்தச் சேவை குறைபாடும் இல்லை - ஏர்டெல், வோடபோன் வாதம்!

இந்தியாவில் அதிக தொகை கொடுக்கும் சிலருக்கு மட்டும் பிரத்யேக சலுகைகள் வழங்குவதை நிறுத்த பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு ட்ராய் உத்தரவிட்டிருந்தது. அப்படியான எந்தச் சேவை குறைபாடுகளையும் பயனர்களுக்கு கொடுக்கவில்லை என சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜாப்ரா எலைட் 45h: அதிரடி விலையில் சிறப்பம்சங்களுடன் வரும் ஆன்-இயர் ஹெட்போன்!

டென்மார்க் நிறுவனமான ஜாப்ரா தனது புதிய ஆன்-இயர் ஹெட்போனை ரூ.9,999 என்ற விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details