தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-7-pm
top-10-news-7-pm

By

Published : Jul 13, 2020, 7:08 PM IST

தமிழ்நாட்டில் இன்று 4,328 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 13) 4 ஆயிரத்து 328 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம், பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஜூலை 31 வரை பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படும்!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என அரசு அறிவித்துள்ளது.

'அனைத்து மொத்தச் சந்தைகளையும் திறக்க வேண்டும்' - தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு

சென்னை: கோயம்பேடு சந்தை, திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்துச் சந்தைகளையும் உடனடியாக திறந்திட வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவுடன் கைகோக்கும் இந்தியா!

இந்தியாவின் கருத்தாக்கம் என்ற பெயரில் நடைபெறவுள்ள மாநாட்டில் அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மைக் பாம்பியோ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

இந்தியாவில் கூகுள் நிறுவனம்75,000 கோடி ரூபாய் முதலீடு!

டெல்லி: அடுத்து 5 முதல் 7 ஆண்டு காலத்திற்கு டிஜிட்டல்மயமாக்கலை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தியாவில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம்: ஆம் ஆத்மி கவுன்சிலருக்கு பிணை மறுப்பு!

டெல்லி: உளவுத்துறை உயர் அலுவலர் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் ஹுசைனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

'மருத்துவக் கழிவுகளை அகற்ற நடமாடும் எரியூட்டு வாகனம்' - அமைச்சர் வேலுமணி

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணியை எளிதாக்க நடமாடும் எரியூட்டு வாகனம் வாங்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

முன்னாள் காதலிக்காக பிரார்த்தனை செய்யும் விவேக் ஓபராய்!

ஐஸ்வர்யா ராயின் குடும்பம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக நடிகர் விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.

'இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி' - ஜேசன் ஹோல்டர்!

செளதாம்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

'நீங்க செய்றது தப்பு' - ஏர்டெல், வோடஃபோன் திட்டங்களுக்கு தடைவிதித்த டிராய்

டெல்லி: ஏர்டெல், வோடஃபோன் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையில் சில முன்னுரிமைகளை அளிக்கும் வகையில் அறிவித்திருந்த திட்டத்திற்கு டிராய் தடைவிதித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details