தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 pm - top 10 news 7 pm on june 20

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news 7 pm
top 10 news 7 pm

By

Published : Jun 20, 2021, 7:29 PM IST

1. கரோனா 3ஆவது அலை... குழந்தைகளுக்கான பிரத்யேக மையம்: நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்

கரோனா 3ஆவது அலையின் தாக்குதலைச் சமாளிக்க, குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக கரோனா பராமரிப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2. உருமாறிய டெல்டா வைரஸ் 70 விழுக்காடு பேருக்குத் தாக்குதல்: பொதுசுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா வைரஸ் 70 விழுக்காடு பேருக்குத் தாக்கியிருக்கலாம் என மாநில பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

3. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்!

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, இரண்டு மணி நேர விசாரணைக்குப் பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.

4. WTC FINAL: அடுத்த செஷனுக்கு தாங்குமா இந்தியா; மிரட்டும் ஜேமீசன், வாக்னர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாளில் மதிய உணவு இடைவேளைக்கு முன்வரை, இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்து திணறிவருகிறது.

5. அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர டிசி தேவையில்லை!

8ஆம் வகுப்பு வரையில் மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்க்கலாம் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

6. ஈரானின் புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

ஈரான் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7. பெட்ரோல் விலை உயர்வு : 'வரி வசூலில் பிஹெச்டி' என ராகுல் நையாண்டி!

ஒன்றிய அரசு வருமான வரி, கார்ப்பரேட் வரிகளைவிட பெட்ரோல், டீசலில் இருந்து அதிக வருமானம் ஈட்டுவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி., ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

8. காஷ்மீர்: 15 ரயில் நிலையங்களில் ஒருங்கிணைந்த ஒய்-ஃபை சேவை!

உலக ஒய்-ஃபை தினமான இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 15 ரயில் நிலையங்களில் ஒய்-ஃபை வழங்கப்பட்டதை அறிவித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

9. டெல்லியில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தாமதம்!

இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள ரஷ்ய கரோனா தடுப்பூசி ’ஸ்பூட்னிக் வி’ தாமதமானது.

10. உத்தரகாண்டில் ஊரடங்கு நீட்டிப்பு - வாரத்தில் 5 நாட்கள் கடை திறக்கலாம்

சார் தாம் யாத்திரை ஜூலை 11 முதல் தொடங்கும், இதில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் நிச்சயமாக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details