தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 7 AM - காலை 7 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-7-am
top-10-news-7-am

By

Published : Aug 31, 2021, 7:14 AM IST

1. அக்டோபர்- நவம்பரில் மூன்றாம் அலை?

கோவிட் இரண்டாம் அலை தீவிரமாக இருந்த நேரங்களில் நாட்டில் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகப் பாதிப்புகள் தினமும் ஏற்பட்டன.

2. தமிழ்நாட்டில் செப். 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் செப்டம்பர் 15ஆம் தேதிவரை தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

3. ஆண்டுகள் கடந்து பள்ளி வாசம் காணும் மாணவர்கள் - செப்.1 பள்ளிகள் திறப்பு உறுதி

பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பின்படி, நாளை (செப். 1) பள்ளிகள் திறக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

4. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்காக கட்டப்பட்ட விடுதிக் கட்டடங்களைத் திறந்துவைத்த ஸ்டாலின்

ஆதிதிராவிடர் மாணவர்கள், பணிபுரியும் மகளிருக்காக ரூ. 10.04 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

5. தமிழ்நாடு கரோனா அப்டேட்: 1,739 பேர் குணமடைந்தனர் - 1,523 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1523 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

6. தடுப்பூசி முகாம்கள் விரிவாக்கம் - மாநகராட்சி முடிவு

செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வார்டிற்கு ஒரு முகாம் எனத் தடுப்பூசி முகாம்களை 200ஆக விரிவாக்கம் செய்ய சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

7. குப்பையில் கிடந்த பொருள்களைச் சாப்பிட்ட 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

குப்பையில் கிடந்த காலாவதியான பொருள்களைச் சாப்பிட்ட 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார்.

8. 15 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை; திமுக பிரமுகருக்கு வலைவீச்சு!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் திமுக பிரமுகரை காவலர்கள் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

9. இன்றைய ராசி பலன் - ஆகஸ்ட் 31

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காண்போம்.

10.இளையராஜா இசையில் மதுரை மணிக்குறவர் விரைவில் வெளியீடு!

இளையராஜா இசையில் உருவாகியுள்ள மதுரை மணிக்குறவர் படம் விரைவில் வெளியாகிறது. இப்படத்தில் ஹரிக்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details