தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - undefined

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS 7 AM
காலை 7 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Aug 7, 2021, 7:42 AM IST

டோக்கியோ ஒலிம்பிக் 15ஆவது நாள்: எந்த இடத்தில் இருக்கிறது இந்தியா?

டோக்கியோ ஒலிம்பிக் 2020இல் 15ஆம் நாள் போட்டியின் முடிவில், இந்தியா 66ஆவது இடத்தில் உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் 16ஆவது நாள் அட்டவணை: இந்தியாவிற்கான போட்டிகள் எப்போது?

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள நீரஜ் சோப்ரா பங்கேற்கும் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டி நாளை (ஆக.7) மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது.

அரசு மதுபான கடைக்கு எதிராகப் பெண்கள் திடீர் போராட்டம்

சுங்குவார்சத்திரம் அருகே புதியதாகத் திறக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தயான்சந்த் பெயரில் புதிய விருதை அறிவித்திருக்கலாம் - முன்னாள் ஹாக்கி கேப்டன் கருத்து

தயான் சந்த் கேல் ரத்னா விருது என அறிவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றாலும் அவரின் நினைவாக வேறு விருது ஒன்றை அறிவிப்பதே கூடுதல் சிறப்பாக இருக்கும் என அர்ஜூனா விருது வென்றவரும், இந்திய முன்னாள் ஹாக்கி அணியின் கேப்டனுமான முகமது ரியாஸ் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் கொலை வழக்கு - தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது

கோயம்புத்தூரில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளரை படுகொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கடிதம்

பள்ளியில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்கள், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற தகுதியானவர்களாகி விடுவார்களா? என பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி கடிதம் அனுப்பியுள்ளது.

'நீட்டில் அரசுப்பள்ளி மாணவர்களை அதிகரிக்க அரசின் நடவடிக்கை அவசியம்'

அரசுப்பள்ளி மாணாக்கர் நீட் தேர்விற்கு குறைந்த அளவில் விண்ணப்பித்திருப்பது கவலை அளிப்பதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவில் கட்டமைப்பு வசதிகளில் கோவை ரயில் நிலையம் முதலிடம்!

இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் நிறுவன ஆய்வுகளின் அடிப்படையில், கட்டமைப்பு, ஆரோக்கியம், ஆற்றல், தண்ணீர் மேலாண்மை என 6 பிரிவுகளில் 83/100 புள்ளிகள் பெற்று, தேசிய அளவில் ‘பிளாட்டினம்’ சான்றிதழ் பெற்ற ஆறாவது ரயில் நிலையமாகவும், தெற்கு ரயில்வேயில் முதலிடம் என்ற பெருமையையும் கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது.

பொன்னேரியில் ரயிலை மறித்து போராட்டம் - சேவை பாதிப்பு

சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்க வலியுறுத்தி ரயில் பயணிகள் போராட்டம் நடத்தியதால் வருவதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

உயிர்க்கொல்லி ப்ளூடூத் இயர்போன்!

இளைஞர் ஒருவரின் உயிருக்கு எமனாக மாறியுள்ளது ப்ளூடூத் இயர்போன்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details