தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM - காலை 7 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்...

காலை 7 மணி செய்தி சுருக்கம்
காலை 7 மணி செய்தி சுருக்கம்

By

Published : Jan 6, 2021, 7:11 AM IST

சென்னை - லக்னோ சிறப்பு ரயில்கள் அறிமுகம்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவுக்கு வாரம் இருமுறை செல்லும் சிறப்பு ரயில் சேவையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

காவல் ஆணையர் அலுவலக உணவகத்தில் உணவின் தரத்தை சரிபார்த்த ஆணையர்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் உணவகத்தில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்து உணவின் தரத்தை சரிபார்த்தார்.

தைப்பூசத்திற்கு பொது விடுமுறை: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த பாஜக மாநில பொருளாளர்!

தைப்பூசத்திற்கு பொது விடுமுறையளித்துள்ள தமிழ்நாடு அரசுக்கு, பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியாவை புகழ்ந்து தள்ளிய பில்கேட்ஸ்!

டெல்லி: இந்தியா கரோனாவுக்கு எதிரான போரை சிறப்பாக கையாண்டுவருவதாக மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

ராஜஸ்தானில் போர் விமானம் விபத்து!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் சூரத்கரில் இந்திய விமானப் படையின் மிக்-21 ரகப்போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

புத்தாண்டு அன்று வித்தியாசமான சாதனை படைத்த இந்தியா!

ஜெனிவா: புத்தாண்டு அன்று உலகிலேயே இந்தியாவில்தான் அதிக குழந்தைகள் பிறந்துள்ளதாக யுனிசெப் அமைப்புத் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான பிரிட்டன் தூதராக அலெக்சாண்டர் எல்லிஸ் நியமனம்!

இந்தியாவிற்கான பிரிட்டன் தூதராக அலெக்சாண்டர் எல்லிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா, பிரிட்டனில் வாழும் திறமைமிக்கவர்களை போற்றும் வகையில் தனது திட்டப்பணி இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ்எல்: மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய மும்பை சிட்டி எஃப்சி!

ஐஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி அணி 3-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை வீழ்த்தியது.

‘பயிற்சிக்கு 1 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது’- சாய்னா நேவால்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடருக்காகச் சென்றுள்ள இந்திய வீரர்கள் ஒரு மணி நேரம் மட்டுமே பயிற்சிபெற அனுமதிக்கப்படுவதாக சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பிடம் சாய்னா நேவால் ட்விட்டரில் முறையிட்டுள்ளார்.

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தொடக்கம்

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு ஜன.06 முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தொடங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details