தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - சபாநாயகர் பிச்சாண்டி

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திகள்...

Top 10 news 5pm
Top 10 news 5pm

By

Published : May 10, 2021, 5:10 PM IST

ரெம்டெசிவிர் மருந்து வழங்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

கோயம்புத்தூர்: ரெம்டெசிவிர் மருந்துகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

’மாநிலங்களுக்கு 9 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள்’ - மத்திய அரசு

மாநில அரசுகளுக்கு அடுத்த மூன்று நாள்களில் கூடுதலாக ஒன்பது லட்சம் தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் கு. பிச்சாண்டி இன்று (மே 10) பதவி ஏற்றுக்கொண்டார்.

வளிமண்டல சுழற்சி:மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மேற்கு வங்க ஆளுநர் ஆய்வு

சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் ஏற்பட்ட கலவரங்களால் பாதிக்கப்பட்ட இடங்களை மேற்குவங்க ஆளுநர் நேரில் பார்வையிட உள்ளார்.
புதிய தொழில்நுட்பதுடன் ஆக்சிஜன் உற்பத்தி கருவி - இளம் கண்டுபிடிப்பாளரின் புதிய முயற்சி

காஷ்மீர் அருகே இளம் கண்டுபிடிப்பாளர் புதிய தொழில்நுட்பதுடன் ஆக்சிஜன் உற்பத்தி கருவியை கண்டுப்பிடித்துள்ளார்.

கரோனா தொற்றுக்கு ஆளான ஜூனியர் என்.டி.ஆர்!

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திரிபுராவில் ரூ.14.38 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்கள் பறிமுதல்!

அகர்தலா: திரிபுரா மாநிலம் செபாஹிஜாலா என்னும் மாவட்டத்தில் கடத்தல் சோதனைகளில் ஈடுபட்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள்,14.38 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத பொருள்கள் உள்ளிட்ட பிற கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

தோழியின் பர்த்டே பார்ட்டியில் 7 பேரை சுட்டுக்கொன்ற பாய் பிரண்ட்

வாஷிங்டன்: பிறந்தநாள் விழா ஒன்றில் நபர் ஒருவர் ஏழு பேரை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரியாக வெட்டு: 3 பேர் தப்பி ஓட்டம்

சென்னை: ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details