தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news@ 5 PM - டோக்கியோ ஒலிம்பிக்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்....

Top 10 news 5 PM
5 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 23, 2021, 5:05 PM IST

Updated : Jul 23, 2021, 6:01 PM IST

அமைச்சரின் அறிக்கையைக் கிழித்து எறிந்த விவகாரம்: எம்.பி. சாந்தனு சென் இடைநீக்கம்

அமைச்சரின் நகலைக் கிழித்து எறிந்த திருணமூல் காங்கிரஸ் எம்.பி., சாந்தனு சென் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நீட் தேர்வு ரத்து கிடையாது - ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர்

துபாயில் உள்ள இந்திய மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக அங்கு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 11, 12 ஆகிய தேதிகளில் நீட் தேர்வு நடைபெறவுள்ளது.

காபந்து அரசு ஆட்சியில்தான் ஆக்சிஜன் பிரச்சினையால் இறப்பு - மா.சு. தகவல்

காபந்து அரசு ஆட்சியின்போது ஆக்சிஜன் கொண்டுசெல்வதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் மருத்துவமனையில் உயிரிழப்பு ஏற்பட்டதே தவிர, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.

ஜெர்மனியிலிருந்து கடத்திவரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

ஜெர்மனி நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதை மாத்திரைகளை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.

டோக்கியோ ஒலிம்பிக்: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!

இந்தியா சார்பாக 127 தடகள வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தியா இந்தமுறை இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs SL 3rd ODI: டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்த இந்தியா!

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடிவருகிறது.

மும்பையில் நிலச்சரிவு: 36 பேர் உயிரிழப்பு!

மேற்கு மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை ஏற்பட்ட நிலச்சரிவில், இருவர் காணாமல் போயுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளுக்கு பலத்த மழை பெய்வது இடையூறாக உள்ளது.

எதற்கும் துணிந்தவன்: அடுத்தடுத்து வெளியான அப்டேட்டால் ரசிகர்கள் பூரிப்பு

நடிகர் சூர்யா நடிக்கும் 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் அப்டேட்ஸ் அடுத்தடுத்து வெளியாவதால் ரசிகர்கள் பூரிப்படைந்தனர்.

வரி வருவாய் இலக்கை அடைய முனைப்புடன் செயல்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும் என அலுவலர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார்? சைபர் கிரைம் காவல் துறை ட்விட்டருக்கு கடிதம்

நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தை முடக்கியது யார் என்ற விவரங்களைக் கேட்டு, சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர், ட்விட்டர் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

Last Updated : Jul 23, 2021, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details