தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news@ 5 PM - சர்வதேச விருது

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

5 மணி செய்தி
Top ten news

By

Published : Jul 21, 2021, 5:01 PM IST

'தொழிற்கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% முன்னுரிமை வழங்குக'

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, மாணவர்கள் சேர்க்கையின் அடிப்படையில் 10 விழுக்காட்டிற்கும் குறைவான இடங்கள் தொழிற்கல்விப் படிப்புகளில் வழங்கப்பட வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைசெய்துள்ளது.

நான் டிக் டாக் அல்ல டிக் டோக்!

இந்தியாவில் மீண்டு(ம்) புதிய பெயரில் டிக் டாக் செயலி களமிறங்க வாய்ப்புகள் உள்ளன.

'தற்காலிகப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரத்தில் முன்னுரிமை'

கரோனா தொற்றுப் பேரிடர் காலத்தில் பணிபுரிந்துவரும் தற்காலிகப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'ஜிலேபி சாப்பிடத் தடை' - ஆதங்கத்தில் ஐபிஎஸ் அதிகாரி... சிரிப்பலையில் ட்விட்டர்!

தனது ஜிலேபி மோகம் குறித்து ஐபிஎஸ் அலுவலர் சந்தீப் மிட்டலின் ட்வீட் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்திய 13 விசைப்படகுகளுக்கு அனுமதிச் சீட்டு ரத்து

ராமேஸ்வரத்தில் இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்திவந்த 13 விசைப்படகுகளுக்கு மீன்வளத் துறை அலுவலர்கள் அனுமதிச் சீட்டை ரத்துசெய்தனர். இதனால் பிரச்சினை ஏதும் வராமலிருக்க மீன்வளத் துறை அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அடேங்கப்பா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமான தமிழ்ப் படங்கள் பாலிவுட்டில் ரீமேக்காக இருக்கின்றன.

விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளைக் குவித்த ஒற்றைப் பனைமரம்!

17 முறை சர்வதேச விருதுகளை வென்ற ஒற்றைப் பனைமரம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்காட்டில் வெளி நபர்கள் நடமாட்டம்? ஆய்வுசெய்த டிஎஸ்பி

ஏற்காடு மலைப் பகுதிகளில் சந்தேகப்படும் வகையில் வெளி ஆள்கள் நடமாட்டம் இருந்தால், பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தெரிவிக்க வேண்டும் என காவல் துணைக் கண்காணிப்பாளர் தையல்நாயகி அறிவுறுத்தியுள்ளார்.

அஞ்சு பைசாவுக்கு பிரியாணி: கரோனாவாவது கிரோனாவாவது... அலைமோதிய கூட்டம்!

மதுரை: செல்லூரில் உணவகம் ஒன்றில் அஞ்சு பைசாவுக்கு பிரியாணி என்ற அறிவிப்பால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மறந்து மக்கள் கூட்டம் அலைமோதியது.

'நளினி, முருகன், சாந்தன் முன்விடுதலை கோரி மனு'

நளினி, முருகன், சாந்தன் உள்பட அனைத்துக் கைதிகளுமே முன்விடுதலை கோரி மனு அளித்துள்ளதாக வேலூர் மத்திய சிறையில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details