தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM

By

Published : Jun 12, 2021, 5:13 PM IST

பூஞ்சை, கரோனா மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி-இல் இருந்து விலக்கு

பூஞ்சை நோய்க்கு சிகிச்சையளிக்கும் ஆம்போடெரிசின் பி மருந்துக்கு ஜி.எஸ்.டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கரோனா மருத்துவ பொருள்களுக்கும் ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கலைஞர் நூலகம் - பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்...

மதுரை: அண்ணா நூலகத்தைப்போல் மதுரையில் கலைஞர் நூலகமும் அமையும் என எதிர்பார்ப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

அர்ச்சகராக விருப்பமுள்ள பெண்களுக்கு பயிற்சி - அமைச்சர் சேகர் பாபு

கோயில் அர்ச்சகராக விருப்பமுள்ள பெண்களுக்கு, பயிற்சி அளிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

'குக் வித் கோமாளி சீசன் 3' தொடங்குவது எப்போது?...அப்டேட் இதோ

சென்னை: 'குக் வித் கோமாளி சீசன் 3' குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிவாமயானந்தாஜி மகாராஜின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம்!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பிறகும் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், வடதெரு பெகுதியில் கச்சா எண்ணெய், ஷேல் கேஸ் எடுக்க ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

27ஆண்டுகளுக்கு பின்பு பிஎஸ்பியுடன் கூட்டணி வைத்த சிரோமணி அகாலி தளம்

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக சிரோமணி அகாலி தளம் 27 ஆண்டுகளுக்குப் பின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

மகளுக்கு பாலியல் தொல்லை - தந்தை மீது புகார்

செங்கல்பட்டு: மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக தந்தை மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போர் வரலாறுகளை ஆவணப்படுத்த புதிய கொள்கை - ராஜ்நாத் சிங் ஒப்புதல்

காப்பகம், வகைப்படுத்தல் மற்றும் போர் செயல்பாட்டு வரலாறுகளின் தொகுப்புகளை ஆவணப்படுத்தும் புதிய கொள்கைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

புலிட்சர் விருது பெறுகிறார் தமிழச்சி மேகா ராஜகோபாலன்

இஸ்லாமிய உய்குர்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான சீனாவின் முகாம்களை செயற்கைக்கோள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அம்பலப்படுத்தி எழுதிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மேகா ராஜகோபாலனுக்கு இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details