தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - காந்தியின் கொள்ளுப் பேத்தி

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM

By

Published : Jun 8, 2021, 5:03 PM IST

முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம்!

முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் கிராமம் என்ற பெருமையை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் பெற்றுள்ளது.

மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறை!

மோசடி வழக்கில் காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாற்றுத்திறனாளி குழந்தைகள்: மின்னணுத் தகவல்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியீடு!

டெல்லி: மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மின்னணுத் தகவல்களை வடிவமைப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று (ஜூன்.8) ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் சுப்ரமணியன் சாமி : நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு

சென்னை: பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் தமிழ்நாடு அரசுக்கு எதிராக செயல்படும் பாஜக எம்பி சுப்ரமணியன் சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர்கள்: காவல்துறை விசாரணை!

சென்னையில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

முதல் சிஏஆர்-டி செல் சிகிச்சைக்கு உயிரி தொழில்நுட்பத்துறை ஆதரவு!

மும்பை: மும்பை டாடா மருத்துவமனை ஆராய்ச்சி மையத்தில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்ட சிஏஆர்-டி செல் சிகிச்சைக்கு உயிரி தொழில்நுட்பத்துறை ஆதரவு தெரிவித்துள்ளது.

’மதுரையில் தடுப்பூசி இல்லை’ - கைவிரித்த சுகாதாரத் துறை!

மதுரை: மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் முகாம்கள் நடைபெறாது என மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 கடைசி தேதி: ஐபிபிஎஸ் அறிவிப்பு!

புதுடெல்லி: வங்கி பணிகள் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஜூன் 28 ஆம் தேதி கடைசி நாள் என, வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்(ஐபிபிஎஸ்) அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 'www.ibps.in' என்ற இணையதளத்தில் உள்ளன.

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு - கண்டனம்

மதுரை: கரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த குழந்தையின் கட்டை விரல் துண்டிப்பு: செவிலியர்கள் அலட்சியம்!

செவிலியர்களின் அலட்சியத்தால் பிறந்து 14 நாள்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் துண்டான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details