தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 3, 2021, 5:02 PM IST

1 கலைஞர் பிறந்தநாள்: மதிய உணவும், பெண்களுக்கு சேலையும் வழங்கிய காஞ்சிபுரம் எம்.எல்.ஏ

காஞ்சிபுரம்: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டும், கரோனா முழு ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையிலும் காஞ்சிபுரத்தில் ஹமீத் அவுலியா நற்பணி மன்றம் சார்பில் 500 ஏழை, எளிய மக்களுக்கு மதிய உணவு, பெண்களுக்கு இலவச சேலையினை மாவட்ட எம்.எல்.ஏ சி.வி.எம்.பி. எழிலரசன் இன்று (ஜுன் 3) வழங்கினார்.

2 வாகன நிறுத்துமிடத்தில் அதிக கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: மால்கள், வணிக வளாகங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய வழக்கில், அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

பெரம்பலூர்: கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

4 ரூ. 10 லட்சம் மதிப்புள்ள படுக்கைகள்: அரசு மருத்துவமனைக்கு அளித்த தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர்

வேலூர்: 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐசியூவில் பயன்படுத்தப்படும் படுக்கைகளை வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாநகர தங்கும் விடுதி உரிமையாளர்கள் சங்கத்தினர் இலவசமாக வழங்கினர்.

5 பசுமை தமிழகம் திட்டப்பணி: மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்த ஆட்சியர்!

பசுமை தமிழகம் திட்டப்பணியை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தார்.

6 ரூ.14 லட்சம் கோடி சந்தை மதிப்பு; புதிய உச்சம் தொட்ட ரிலையன்ஸ் குழுமம்!

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்று(ஜூன் 13) ரூ.14.04 லட்சம் கோடி என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

7 பிரதமரை விமர்சித்தப் பத்திரிகையாளர் மீதான தேச துரோக வழக்கு தள்ளுபடி!

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமான கருத்துகளைத் தெரிவித்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேச துரோக வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

8 அருண் மிஸ்ரா நியமனம்: சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவு!

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவு என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கடுமையாகச் சாடியுள்ளார்.

9 ரஷ்ய ஸ்புட்னிக் வி தடுப்பூசியைத் தயாரிக்க அனுமதி கோரும் சீரம்!

டெல்லி: ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியைத் தயாரிக்க இந்தியாவின் சீரம் நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.

10 பயோலாஜிக்கல் இ தடுப்பூசி - 30 கோடி டோஸ் முன்பதிவு

பயோலாஜிக்கல் இ நிறுவனத்திடமிருந்து கரோனா தடுப்பூசியின் 30 கோடி டோஸ்களை பெறுவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details