தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - புதுச்சேரி பாஜகவில் இணைந்த பெண் தாதா

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

TOP 10 NEWS 5 PM
TOP 10 NEWS 5 PM

By

Published : Jan 21, 2021, 5:10 PM IST

பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவு எடுப்பார்: மத்திய அரசு

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாம் கட்ட தடுப்பூசி: பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்களுக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்பு

டெல்லி: இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும்போது பிரதமர் மோடிக்கும், மாநில முதலமைச்சர்களுக்கும் தடுப்பூசி போட வாய்ப்புள்ளது.

ஓபிஎஸ்ஸுடன் விழாக்களில் பங்கெடுத்த கலெக்டருக்கு கரோனா

தேனி: மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

7 தமிழர்களை விடுவித்தால் ஆதரிப்போம்! - கே.எஸ்.அழகிரி

கோவை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்தால் அதில் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

புனே: சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் தீ விபத்து

சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி பாஜகவில் இணைந்த பெண் தாதா!

புதுச்சேரி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பெண் தாதா எழிலரசி பாஜகவில் இணைந்துள்ளார்.

’ சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’: மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்

சென்னை: விடுதலையாக இருந்த நிலையில் சசிகலாவின் உடல்நலக் குறைவு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என வழக்கறிஞர் ராஜராஜன் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தியா திரும்பிய முகமது சிராஜ், ஹனுமா விகாரிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

ஹைதராபாத்: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் திரும்பியுள்ள இந்திய அணி வீரர்கள் முகமது சிராஜ், ஹனுமா விகாரியை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

சீனாவுக்குள் நுழைய 28 அமெரிக்க அரசு அலுவலர்களுக்கு தடை!

பெய்ஜிங்: நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்ட மைக் பாம்பியோ உள்பட 28 அமெரிக்க அரசு அலுவலர்கள், சீனாவின் முக்கிய நகரங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குனராக அறிமுகமாகும் தயாரிப்பாளர்!

ராகவா லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் “ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜன. 21) தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details