தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 13, 2020, 5:08 PM IST

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-5-pm
top-10-news-5-pm

சுந்தர் பிச்சை - மோடி வீடியோ கான்பரன்ஸ் - காரணம் இதுதான்!

டெல்லி: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாகவும், இந்த உரையாடல் பலன் தரும் எனவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று நிபுணரை ஓரங்கட்டும் ட்ரம்ப் அரசு!

வாஷிங்டன்: அமெரிக்காவின் பெருந்தொற்று நிபுணரான அந்தோனி பௌசியை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு தற்போது ஓரங்கட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுடனான வர்த்தகம் - அமெரிக்கா முதல் இடம்!

டெல்லி: இந்தியாவுடன் அதிகளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் தொடர்வதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலிபான் தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு!

காபூல்: ஆப்கானிஸ்தானின் குண்டுஸ், படாக்ஷன் ஆகிய மாகாணங்களில் தலிபான் தாக்குதலில் 12 காவலர்கள், பொதுமக்கள் நான்கு பேர் என 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு மீறல்: சுமார் 17 கோடி ரூபாய் அபராதம் வசூல்!

சென்னை: ஊரடங்கை மீறியதாக கடந்த 111 நாள்களில் அபராதமாக 17 கோடியே 90 லட்சத்து 4 ஆயிரத்து 526 ரூபாய் வசூலித்துள்ளதாக தமிழ்நாடு காவல் துறை தெரிவித்துள்ளது.

கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை - ஈடிவி பாரத்தின் அதிர்ச்சி தரும் ஆய்வு!

திண்டுக்கல்: பொது ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் ஏழை, எளிய மக்களை சுரண்டும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களால் தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா சிகிச்சைக்கான ஃபவிபிரவிர் மருந்து விலை 27% குறைப்பு!

லேசான, மிதமான கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சையளிக்க உதவும் ஃபவிபிரவிர் (Favipiravir) மருந்தின் விலையை க்ளென்மார்க் மருந்து நிறுவனம் 27 விழுக்காடு குறைத்துள்ளது.

'குறைந்தபட்ச சம்பளமாவது கொடுங்கள்' - கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை

சென்னை: வருமானம் இல்லாமல் தவிக்கும் தங்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்க வேண்டும் என அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சூர்யா பிறந்த நாள் கொண்டாட்டம் - ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இனி கூகுள் கட்டுப்பாட்டில் வாட்ஸ்அப்!

டெல்லி: கூகுள் அசிஸ்டன்ட் மூலம் வாட்ஸ்அப் செயலியிலிருந்து கால் செய்யும் புதிய வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details