தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 12, 2020, 5:15 PM IST

ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5PM

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-5-pm
top-10-news-5-pm

ஸ்வப்னா தங்கக் கடத்தல் வழக்கு: என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்!

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் ஸ்வப்னா, அதில் தொடர்புடையவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யாவுக்கு கரோனா தொற்று உறுதி

பாலிவுட் பிக் பி அமிதாப் பச்சனுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாஜக தனது அரசாங்கத்தை கலைக்க முயற்சி - ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றச்சாட்டு!

ஜெய்ப்பூர்: பாஜக தனது அரசாங்கத்தை கலைக்க முயற்சிப்பதாக ராஜஸ்தான் முதலமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதனை எதிர்த்து பாஜகவினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

கவிதைக்கு ஆயிரம் கதைகளை வகுத்தவன் - பிறந்தநாள் வாழ்த்துகள் நா. முத்துக்குமார்

மலை உச்சியில் நின்றுகொண்டிருந்த அவர் எப்போதும் அந்த உச்சியை தன் தலை உச்சிக்கு ஏற்றிக்கொண்டதில்லை. அதனால்தான் நா. முத்துக்குமார் என்னும் கவிதையின் கடைசி வரிகூட கருணையையும், அன்பையும் போதித்திருக்கிறது.

சென்னையில் 76 ஆயிரத்தை கடந்தது கரோனா!

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மருத்துவத் தகுதித் தேர்வில் உள்ள தடைகளை நீக்குக- அன்புமணி ராமதாஸ்

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவர் பயிலும் மாணவர்கள் இந்தியத் தகுதித் தேர்வு எழுதுவதில் உள்ள தடையை நீக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

’மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும்’

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க சித்த மருத்துவமனை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் 375 தூய்மைப் பணியாளர்களுக்குக் கரோனா

சென்னை முழுவதும் 375 தூய்மைப் பணியாளர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் ரஜினிகாந்த் - இயக்குநர் சேரன்

ரஜினியுடன் இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

'இந்தியா-ஆஸ்திரேலியா தொடர் நிச்சயம் நடைபெறும்' - கங்குலி உறுதி

டெல்லி: வரும் டிசம்பர் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நிச்சயம் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details