தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-3pm
top-10-news-3pm

By

Published : Jul 10, 2020, 3:18 PM IST

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கரோனா தொற்று உறுதி!

தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரோனாவால் ஒரே இரவில் சென்னையில் 25 பேர் உயிரிழப்பு!

சென்னை: கரோனா தொற்று காரணமாக நேற்று (ஜூலை 9) இரவிலிருந்து இன்று காலை வரை, சிகிச்சைப் பலனின்றி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் - ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு!

நீட் தேர்வெழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இணைய வழி நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

வாகனத் தணிக்கையில் ஏற்பட்ட மோதல்... உயிரை மாய்த்துக்கொண்ட திருநங்கை!

ஊரடங்கை மீறி வெளியே வந்த திருநங்கை சபினா என்பவரது இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளான சபீனா, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மீண்டும் திரும்பும் வரலாறு - டாடா கைக்கு திரும்பச் செல்லும் மகாராஜா!

டெல்லி: அரசு பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்க டாடா குழுமம் தற்போது ஆர்வம் காட்டிவருகிறது.

இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

டெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கியுள்ளது.

'ராதே ஷ்யாம்' - பிரபாஸின் ரொமான்டிக் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

பிரபாஸின் 20ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது.

30 ஆண்டுகள்... 62 வழக்குகள்... யார் இந்த விகாஸ் துபே?

2001இல் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக அமைச்சர் சந்தோஷ் சுக்லாவை துரத்திச் சென்று காவல் நிலையத்தின் உள்ளேயே வைத்து விகாஸ் துபே படுகொலை செய்தார்.

போலிச் சான்று விவகாரம்; பாகிஸ்தான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை!

வாஷிங்டன்: விமானிகள் போலிச் சான்று பெற்ற விவகாரத்தில் பாகிஸ்தான் விமானங்கள் அமெரிக்காவில் இயங்க தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிக்கோலா டெஸ்லா - பிறந்த தினம் இன்று!

இன்று நாடு முழுவதும் பரவலாக உபயோகிக்கப்படும் AC மின்சாரத்தைக் கண்டுபிடித்து, மின்சாரமயமாக்கலுக்குக் காரணமாக இருந்த அறிவியல் அறிஞர் நிக்கோலா டெஸ்லாவின் பிறந்த தினம் இன்று...

ABOUT THE AUTHOR

...view details