தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS 3 PM - 3 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்தி சுருக்கம்

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM

By

Published : Sep 14, 2021, 3:13 PM IST

1.மாநிலங்களவை தேர்தல் - திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் திமுக மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

2.நீட் தேர்வு - மேலும் ஒரு தற்கொலை

அரியலூரில் நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

3.அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழை

தென்மேற்குப் பருவக்காற்று, வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு, வட கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4.7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையால் கோடிக்கணக்கில் வீண் செலவு- சிஏஜி

தமிழ்நாட்டில் உயர்கல்வி, ஊரக உள்ளாட்சி உள்ளிட்ட 7 துறைகளில் மோசமான நிதி மேலாண்மையினால் கோடிக்கணக்கில் வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5.'5 கட்டமாக பொறியியல் கலந்தாய்வு' - அமைச்சர் பொன்முடி

ஐந்து கட்டமாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

6.கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து வழக்கு - ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7.கால்பந்து போட்டிக்காக வெளிநாடு சென்ற இன்பநிதி - வழி அனுப்பி வைத்த ஸ்டாலின்

மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக வெளிநாடு சென்ற உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.

8.1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து ஆலோசனை

1 முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடியாக வகுப்புகளை தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

9.கேரளா நடிகை திடீர் கைது- பின்னணி என்ன?

கேரளாவில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் படகில் புகைப்படம் எடுத்த மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

10.13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை சந்தித்த பிரபல நடிகர்

நடிகர் நவ்தீப் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தை நேரில் சந்தித்த புகைப்படத்தைத் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details