தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS 3 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 3 மணி செய்திச் சுருக்கம்... இதோ...

top-10-news-3-pm
top-10-news-3-pm

By

Published : Sep 4, 2021, 3:13 PM IST

1. விநாயகர் சதுர்த்திக்குத் தடை ஏன்? அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பெயரில் விநாயகர் சதுர்த்தி நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

2. பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து!

தொழில்முனைவோர், நெசவாளர்களின் கோரிக்கையான பஞ்சு மீதான 1 விழுக்காடு சந்தை நுழைவு வரி ரத்துசெய்யப்படும் என்று சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3. எடப்பாடியை விவாதத்திற்கு அழைத்த மு.க.ஸ்டாலின்: பேரவையில் காரசார விவாதம்!

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் விவாதத்திற்கு அழைத்ததால், பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

4. 2 வாரங்கள் முழு ஊரடங்கு?

கரோனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்துவரும் காரணத்தால் கேரள மாநிலத்தில் மீண்டும் முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5. இந்திய விடுதலைப் போராட்டத்தின் திருப்புமுனை ஜாலியன் வாலாபாக்!

துல்லியமாக மாலை 5.30 மணிக்கு துர்கா தாஸ் தனது உரையைத் தொடங்கிய தருணத்தில், துப்பாக்கிச் சூடு தொடங்கியது.

6. ஓலா கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

சேலத்தில் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநர்கள் இன்று முதல் மூன்று நாள்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

7. விபத்தில் கவிழ்ந்த பழ லாரி... சிதறிய பழங்களை அள்ளிச் சென்ற மக்கள்!

தூத்துக்குடியில் பழங்களை ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்துக்குள்ளானதால் அதிலிருந்த பழங்களைப் பொதுமக்கள் மூட்டைக் கட்டி எடுத்துச் சென்றனர்.

8. கோயில் யானைகளின் உடல்நலன் குறித்து அறிக்கை: வனத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில் யானைகளின் உடல் நலன் குறித்து கால்நடை மருத்துவர் நேரில் ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9.விநாயகர் சிலையை வைத்து ஊர்வலம் செல்ல அனுமதி

புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


10. ’சிவலிங்கத்தை அவமதித்த மணிரத்னம், த்ரிஷா...’ - இந்து அமைப்புகள் புகார்!

நடிகை த்ரிஷா காலணி அணிந்து நந்தி சிலை அருகே நடந்து சென்றதால் அவரைக் கைது செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் புகார் அளித்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details