தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 3 PM - ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ.

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 22, 2021, 3:25 PM IST

1 கரோனா பரவல் - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கரோனா பரவல் மீண்டும் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஒன்றிய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2 வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தீர்மானம் - ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு

வேளாண் திருத்தச் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3 ஓஎன்ஜிசி விண்ணப்பத்தை அரசு நிராகரித்துள்ளது- அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓஎன்ஜிசி நிர்வாகம் அரியலூரில் 10 எண்ணெய் கிணறுகளும், கடலூரில் ஐந்து எண்ணெய் கிணறுகளும் அமைப்பதற்கான ஓஎன்ஜிசி விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு நிராகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

4 ’மதுரையில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் அமைத்திடுக’ - ஒன்றிய அமைச்சரிடம் எம்பிக்கள் கோரிக்கை

தென்னிந்தியாவிற்கு பயன்படும் வகையில், தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தை மதுரையில் தொடங்க வேண்டும் என எம்.பி சு.வெங்கடேசன் கோரியுள்ளார்.

5 'நீட் சமூக அநீதியின் சின்னம்' - அன்புமணி

ஒத்த கருத்துடைய மாநில முதலமைச்சர்களின் கூட்டணியை உருவாக்கி நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி நீதியரசர் ஏ.கே. ராஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

6 திருப்பதியில் ஜூலை மாத தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை மாத தரிசனத்திற்கான இணையதள முன்பதிவு இன்று தொடங்கியது.

7 'அவரு என் அப்பா மாதிரி' - முதலமைச்சரின் காலில் விழுந்த கலெக்டர் விளக்கம்

மாவட்ட ஆட்சியர் ஒருவர் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் காலில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

8 ’அடுத்தடுத்த கரோனா அலைகளுக்கு தயாராக இருப்போம்’ - வெள்ளை அறிக்கை வெளியிட்ட ராகுல் காந்தி

”இந்த வெள்ளை அறிக்கையின் நோக்கம் அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது அல்ல, மாறாக மூன்றாவது அலை நோய்த்தொற்றுக்கு நாட்டைத் தயார் செய்ய உதவும் வகையிலேயே வெளியிடப்படுகிறது. முன்கூட்டியே தயார் நிலையில் இருந்தால் நாம் எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும்” - ராகுல் காந்தி

9 அதிக குழந்தை பெற்றவர்களுக்குப் பரிசு: மிசோரத்தில் விநோத சலுகை!

மிசோரத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுவதாக அம்மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் ராபாட் ரோமாவியா ராய்டே அறிவித்துள்ளார்.

10 அசாமில் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை: 5.2 கிலோவாம்!

அசாம் மாநிலத்தில் 5.2 கிலோகிராம் எடையுடன் குழந்தை பிறந்தது மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகப் பிறக்கும் குழந்தைகள் எடை சராசரியாக 2.5 கிலோகிராம் இருக்கும்.

ABOUT THE AUTHOR

...view details