தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM

By

Published : Oct 29, 2020, 3:15 PM IST

’7.5% இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநரின் செயல் விசித்திரமானது’ - நீதிபதிகள்

மதுரை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநர் நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்றாலும் மனசாட்சிப்படி முடிவெடுக்க நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

நந்தா கல்வி குழுமத்தில் ரெய்டு - ரூ.5 கோடி பறிமுதல்!

சென்னை: நந்தா கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டு வரும் வருமான வரி சோதனையில், தற்போது வரை 150 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துகள் கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படும் வரை என்ன செய்தீர்கள்? மதுரைக் கிளை கேள்வி

மதுரை: அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் வரை என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என அலுவலர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

சமூக வலைதளங்களில் வருவது எனது அறிக்கை அல்ல: ரஜினிகாந்த் ட்வீட்!

சென்னை: ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வருவது எனது அறிக்கை அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விட்டுவிட்டு மழை தொடரும்!

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்னணியில் ஜோ பிடன்... ட்ரம்ப்பிற்கு பின்னடைவு!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ட்ரம்பைவிட சுமார் 12 விழுக்காடு வாக்குகளை ஜோ பிடன் கூடுதலாக பெறுவார் என்று சமீபத்திய கருத்துகணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் மேப் விவகாரம்: எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க ட்விட்டருக்கு உத்தரவு!

டெல்லி: ட்விட்டர் மேப்பில் லடாக் சீன பகுதி என காட்டிய விவகாரத்தில், எழுத்துப்பூர்வ மன்னிப்பு கோர வேண்டும் என ட்விட்டர் நிர்வாகத்திற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு உத்தரவிட்டுள்ளது.

ஆப்கானில் தலிபான் தாக்குதல்: 4 நாள்களில் 58 பொதுமக்கள் உயிரிழப்பு!

கபூல்: ஆப்கானில் கடந்த 4 நாள்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் குறைந்தபட்சம் 58 பொதுமக்கள் உயிரிழந்தது மட்டுமின்றி 143 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரசிகர்களின் 'தல' - ட்ரெண்டாகும் அஜித்தின் புதிய புகைப்படம்

"வலிமை" திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் அரிய வகை ஆமை!

மேற்கு வங்க மாநில பர்தாமன் மாவட்டத்தில், மஞ்சள் நிற ஆமை குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தவர் வலையில் சிக்கியுள்ளது. முன்னதாக ஒடிசா மாநிலத்தில் இவ்வகை ஆமை ஒன்று ஜூலை மாதத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details