தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - TOP 10 NEWS 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 PM
Top 10 news @ 3 PM

By

Published : Oct 28, 2020, 3:35 PM IST

4 விழுக்காடாக குறைந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

சென்னை: கரோனா வைரஸ் நோய் தொற்று பரவலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நான்கு விழுக்காடாக குறைந்துள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பெண்களை அவமானப்படுத்தியவர் எய்ம்ஸ் உறுப்பினரா? - சொல்கிறார் திருமாவளவன்!

புதுச்சேரி: பெண்களை அவமானப்படுத்திய ஒருவரை மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு உறுப்பினராக நியமித்தது கண்டிக்கத்தக்கது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சிறையில் கன்னியாகுமரி மீனவர்கள் 10 பேர் அடைப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு

கன்னியாகுமரி: கர்நாடகா சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக மீட்கக் கோரி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மராட்டியத்திலிருந்து தூத்துக்குடி வந்திறங்கிய வெங்காயம்!

தூத்துக்குடியில் வெங்காய விலையை கட்டுப்படுத்த நாசிக்கிலிருந்து 10 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

போலி நிதி நிறுவனம் மூலம் 1300 பேரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி

ஈரோடு: போலி நிதி நிறுவனம் மூலம் 1300 பேரை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த மூவரில் ஒருவரை அந்நிறுவன ஊழியர்களே பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த ஜூம் செயலி!

ஜூம் செயலியின் மேக், விண்டோஸ், ஜூம் ஆண்ட்ராய்டு பயன்பாடு, ஜூம் ரூம்களுக்கான ஜூம் டெஸ்க்டாப் பதிப்பு 5.4.0 ஆகியவற்றில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாதுகாப்பு அம்சமானது நிறுவப்பட்டுள்ளது. ஜூம் ஐஓஎஸ் பயன்பாடுக்கு மட்டும், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஒப்புதலுக்காக இந்த அம்சம் நிலுவையிலுள்ளது.

பாகிஸ்தானுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாற்றம்: ஜெய்பூரில் உளவாளி கைது!

ஜெய்பூர்: எல்லை மற்றும் ராணுவ தகவல்களை பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐ அமைப்பிற்கு ரகசியமாக வாட்ஸ்அப்பில் அனுப்பிய நபரை மத்திய புலனாய்வுப் பிரிவினர் அதிரடியாக கைதுசெய்தனர்.

பண்டிகை காலத்தை டபுள் எனர்ஜியுடன் கொண்டாட டாக்டரின் டிப்ஸ்!

பண்டிகை காலத்தை மகிழ்ச்சிகரமாக கெண்டாடவும், உங்களுக்கு பிடித்த இனிப்புகள் மற்றும் சுவைகளை சாப்பிடவும் தேவையான சில முக்கிய விஷயங்களை உங்களுடன் இந்தக் கட்டுரையில் பகிர்ந்துள்ளோம்.

குழந்தைகளை குறிவைக்கும் குடற்புழு: தடுப்பது எப்படி?

குழந்தைகளை முதல் பெரியவர்கள் வரை சந்திக்கும் முக்கியப் பிரச்னையான குடற்புழு பாதிப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து நம்மிடம் விவரிக்கிறார் நியோனாட்டாலஜிஸ்ட் ஆலோசகர் டாக்டர் விஜயானந்த் ஜமல்பூரி.

பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பா; பெங்களூருவில் இருவரிடம் விசாரணை!

டெல்லியைச் சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அலுவலர்கள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் இருவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில், என்.ஐ.ஏ அலுவலர்கள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details