தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத் 3 மணி செய்தி
ஈடிவி பாரத் 3 மணி செய்தி

By

Published : Jul 26, 2020, 3:07 PM IST

'இந்தியாவை முதுகில் குத்தியது பாகிஸ்தான்' - நரேந்திர மோடி

பாகிஸ்தானுடன் இந்தியா நட்புறவுடன் இருக்கவே விரும்பியது எனவும் ஆனால் கார்கில் போரில் இந்தியாவை பாகிஸ்தான் முதுகில் குத்தியது எனவும் பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

கார்கில் வெற்றியைக் கொண்டாடும் இந்திய ராணுவம்!

இந்திய வீரர்களின் தியாகத்தைப் பொற்றும் வகையிலும் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி இந்திய ராணுவம் சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க அழைப்பு விடுங்கள்: ஆளுநருக்கு கோரிக்கை வைத்த சிதம்பரம்

டெல்லி: ராஜஸ்தான் அரசியல் சூழல் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசிய காணொலி ஒன்று காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை உத்தரவு

சென்னை: தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வித் துறையின் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்தது தவறு என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளதா? - ஸ்டாலின் கேள்வி

சென்னை: சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மறைக்கப்பட்டுள்ளதா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஃபேஸ்புக் மெசஞ்சர் அப்டேட்: குழுவாக மேற்கொள்ளும் வீடியோ அழைப்புகளை நேரலை செய்யலாம்!

ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் குழுவாக மேற்கொள்ளும் காணொலி அழைப்புகளை, ஃபேஸ்புக் செயலியில் நேரலை செய்யும் வசதியை அந்நிறுவனம் அளித்துள்ளது. அதன் மூலம் 50 பேருடன் ஒரே நேரத்தில் காணொலி வாயிலாக அழைப்புகளில் இணையலாம்.

இன்ஸ்டாகிராம் நிதிதிரட்டல்: தனிபட்ட நிதி தேவைகளுக்கு பணம் திரட்டலாம்!

இன்ஸ்டாகிராம் மூலம் 18 வயதுக்கு மேலுள்ளவர்கள் முக்கிய தேவையை பூர்த்தி செய்ய பணம் திரட்டலாம். அதன் தனிபட்ட நிதி திரட்டல் அம்சத்தின் மூலம் சிறு தொழில் மேம்பாட்டுக்காகவோ, அத்தியாவசிய தேவைகளுக்காகவோ, மருத்துவமனை செலவுகளுக்காகவோ பணம் திரட்ட முடியும்.

'பெண்மான்களைப் பேணுமளவுக்கு ஆண்மான்களை ஆதரிப்பதில்லை' - ரஹ்மானுக்கு ஆறுதல் கூறிய வைரமுத்து

பாலிவுட்டில் தனக்கு எதிராக சதி நடக்கிறது என்று ஏ.ஆர். ரஹ்மான் கூறியதற்கு கவிஞர் வைரமுத்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

'ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலிதான் சரியான நபர்' - சங்ககாரா

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்குச் சரியான நபராக இருப்பார் என இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககாரா கூறியுள்ளார்.

கில்கிட் விமான தளத்தில் பயிற்சி மேற்கொண்ட பாகிஸ்தான் விமான படை!

கில்கிட் - பால்திஸ்தான் பகுதியில் உள்ள விமான தளத்தில் பாகிஸ்தான் விமான படை வீரர்கள் போர் பயிற்சி மேற்கொண்டுள்ள சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details